பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர்க்குத் தண்ணளி செய்யும் தண் பொருநை பாயும் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்த இளசை மாநகர் எனப்படும் எட்டையபுரம் சிற்றரசில் பிறந்த சிறப்புடையவர் காலம் அளித்த கவிஞரர் கிய பாரதியார். இவரது தந்தை சின்னச்சாமி அய்யர், தாய் இலட்சுமி அம்மையார். பிறந்த ஆண்டு 1882 | நவம்பர்) ஆகும். நெல்வேயிலும் சியிலும் உயரி கல்வி கற்ருர். பன் னிரண் டாவது வயதிலேயே இவருக்குத் திருமணம் ஆயிற் . இவரது அன்பிற்குரிய மனைவி செல்லம்மாள் ஆவார். மதுரையில் தமிழாசிரியராகவும், சென்னையில் சு தே ச மி த் தி ர ன் இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றிய பாரதியார், தாமே இந்தியா என்னும் இதழைத் தொடங்கி உணர்ச்சி ஊட்டும் கட்டுரைகள் பல எழுதி வரலார்ை. இதற்கிடையில் அந்நியர் ஆட்சியை அடியோடு அகற்ற எண்ணிய அரசியல் த லவாகள் பலர் சிறைப்பட்டனர். ஆனல் செந்தமிழ்ப் புலவரோ புதுவை சென்று அஞ்ஞாத வாசம் செய்தார். அதுகால் பாரத மணித் திருநாட்டின் மக்களது அவல நிலையை, அடிமைத் தனத்தை எண்ணி, rண் ணி, இதயங்குமுறி, எரிமலையாக மாறி, பைந்தமிழில் பாடல்கள் பலவற்றை, உள்ளம் உருகி உணர்ச்சி பொங்கப் பாடினர். அழகான, எளிய, இனிய நடையிலே, மக்களுக்காக மக்களைப் பற்றி, மக்களிடையே பழகும் மொழியில் அருளாவேசத்துடன் கவிதைகள் பலவற்றை அள்ளி அள்ளிக் கொடுத்தார். வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை, ஆகிய பண்புகள் அனைத்தும் இவர் பாடல்களில் சுடர் விட்டன. இவற்றிற்கெல்லாம் மேலாக இசை நயமுடன் இவரது பாக்கள் இயற்றப்பட்டதால் அவை உயிர்த் துடிப்புள்ள பாக்களாக உயர்ந்து விளங்கின. நமது நாட்டின் அவல நிலையை மக்கள் உணர்ந்து, அதனைப் போக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஆசை கொண்ட அருந்தமிழ்ப் புலவன் நேசமுடன் நம்மை விளித்து,

  • பெற்ற தாயும் பிறந்த பொன்டுைம்

நற்ற வானிலும் நனி சிறந்தனவே” என்று நாட்டுப் பற்றினை நமக்கு ஊட்டி அடுத்து அடிமைத் தளையின அருத்தெறிய வேண்டியது நமது தலைய ய க மை என்பதை, == 18