பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உரோமாபுப் பழம்பெரும் நூலகங்கள் பழம் பெருமையும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த உரோமாபுரி கி. மு. 753-ம் ஆண்டு நிறுவப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். தொடக்ககாலத்திலேயே உரோமாபுரி கிரேக்க நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால், உரோமாபுரி மக்கள் கிரேக்க நெடுங்கணக்க கினேயே தங்களது நெடுங்கணக்காக ஏற்றுக்கொண்டனர். மேலும் கி. மு. 264 -241 ஆண்டுகளில் நடந்த முதல் பியுனிக் போருக்குப் (Punic War) பின்னர் உரோமாபுரி மக்கள் கிரேக்க நாகரிகத்தையே முழுக்க முழுக்கக் கடைப்பிடிக்க லாயினர். நாளடைவில் வீரத்தின் விளைநிலமாக விளங்கிய கிரேக்க நாட்டினை உரேர்மாபுரி வீரர்கள் வென்று தங்கள் அடிப்படுத்தினர். அதன் காரணமாகக் கிரேக்சு நாகரிகம் உரோமாபுரி மக்களது வாழ்க்கையில் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கியது. அந்நிலையில் உரோம் நாட்டு மக்கள் கிரேக்க இலக்கியங்கள், கிரேக்க மெய்யுணர்வு நூல்கள், கிரேக்க அறிவியல் நூல்கன் ஆகியவற்றை ஆர்வத்தோடு படித்து, அவற்றை ஆராய்ந்து நிறைந்ந கல்வி அறிவுடைய வர்களாக, ஆழ்ந்த புலமை உடையவர்களாக உயர்ந்து விளங்கினர். அத்துடன் அவர்கள் தங்கள் குழந்தைகளைக் கல்வி கற்று வருவதற்கு ஏதென்ஸ் (Athens) நகருக்கு அனுப்பினர். மேலும் அவர்களில் பலர் கிரேக்க மொழியில் பேசவும் தலைப்பட்டனர். இதன் விளைவாக ரோம் நாட்டு மக்கள் நூல்களைப் படைப்பதில் கிரேக்க மரபினையே கைக்கொண்டனர். இலத்தீன் இலக்கியத்தின் தொடக்கக் காலம் கி. மு. இரண்டாவது நூற்ருண்டுதான் என்பது இங்கு நினைவுகூறத்தக்கதாகும். 41