பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவிடப்பட்டது. கிரேக்கர்களும்கூட இ க் கோ ட க் ஸ் வடிவத்தை ஒரளவு விரும்பினர். அந்நூற்ருண்டிலிருந்து கிறிஸ்தவ நூல்கள் அனைத்தும் அவ்வடிவத்தில்தான் வெளி யிடப்பெற்றன. ஆளுல் அதே நேரத்தில் புறச் சமயங்களின் நூல்கள் கோரையின் நீர்ப்பூண்டிலிருந்து பெய்த சுருள் வடிவ வரைதாள்களால்தான் ஆக்கப்பட்டன. எல்லாப் பொருள்களைப் பற்றியும், உரோம நூல்கள் வெளிவந்தன. சட்டம், அறிவியல், கணிதம், சமயம், தத்துவம், அரசியல் ஆகிய பொருள்களைப் பற்றிப் பல நூல்கள் எழுந்தன. அத்துடன் பொதுநிலை வாழ் விற்கு வழிகாட்டும் நூல்களும் எழுதப்பட்டன. களம் பல கண்டு, வெற்றிகள் பல பூண்டு, உரோமாபுரி யின் கீர்த்தியை உலகம் வியக்கும் வண்ணம் பெருக்கிய வீரமிக்க உரோமாபுரிப் படைதி ஆலேவர்கள் கிரேக்கத்தினே வென்ற பொழுது, அங்கிருந்த நூலகங்கள் அனைத்தையும் தங்கள் நாட்டிற்கு த் திறைப் பொருள் போன்று கொண்டு வந்தனர். அதாவது போரில் வெற்றி பெற்றவர்களுக்குக் கிடைக்கின்ற ஆதாயங்களில் ஒன்ருக நூலகமும் கருதப்பட் டது. சற்று மிகைப்படுத்திக் கூறினால் உரோமாபுரி வீரர்கள் நூலகங்களைக் கொள்ளைப் பொருள்களாகக் கருதினர். ஒரு சில படைத் தலைவர்கள் அவ்வாறு கொண்டு வந்த நூலகங் ளைத் தங்கள் உடைமைகளாக ஆக்கிக்கொண்டனர். அதே நேரத்தில் நூல்களைச் சேகரித்தலும், அவ்வாறு சேகரித்த நூல்களால் நூலகங்களை அமைத்தலும் செல்வர்களது பேராசைகளாக விளங்கின. ஒரு சிலர் இப்பித்துப் பிடித்தே அலேந்தனர். எழுதப் படிக்கத் தெரியாதிருந்தும் கூட உரோ ாபுரிச் செல்வர்களில் பலர் தங்கள் இல்லங்களில் நூலகம் அமைப்பதைப் பெரிதும் விரும்பினர். அதற்குத் தங்களது பெரும்பொருளேயும் பொழுதையும் செலவிட்டனர். தங்களது இல்லத்தின் இன்றியமையாத ஒரு முக்கியப் பகுதியாக நூல த்தினை அவர்கள் கருதினர். செனக்கா (Seneca) என்பவர், ால உரோமாபுரிச் செல்வர்கள், நற்குடியாளர்கள், எவ்வாறு வந்நீர்க் குளிப்பு, தண்ணிர்க்குளிப்பு ஆகியவற்றை வாழ்க் 43