பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைக்கு இன்றியமையாத வசதிகளாகக் கருதிர்ைகனோ, அவ்வாறே நூலகத்தை ஒர் இன்றியமையாத முக்கிய அணிகலனுகக் கருதினர்கள் என்று கூறியுள்ளார். புகழ்பெற்ற உரோமப் பேருரையாளராகிய சிசரோ (cicero) தம் மாளிகைகள் அனைத்திலும் சிறந்த நூல் தொகுதி களைச் சேகரித்து வைத்திருந்தமை இங்குக் குறிப்பிடத்தக்க தாகும். அவர் பேருரையாளராக விளங்கிப் பேரும் புகழும் பெற்றமை க்குப் பெருந்துணை புரிந்தமை அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களே ஆகும். அவரது காலம் கி. மு. 106-43 ஆகும். மாவீரர் சுல்லா (Sulla) கி.மு. 86-ல் ஏதென்ஸ் தகரைக் கைப்பற்றிய பொழுது, அங்கிருந் கிரேக்க மெய் நூலாசிரியர் அரிஸ்டாட்டிலின் நூலகத்தையும் கைப்பற்றி , அதனைத் தன்னகப் படுத்திக்கொண்டார். இக்காலத்தில் புகழ்வாய்ந்து விளங்கிய மற்ருெரு நூலகம் பெரு விருந்தளிப் பதில் பெருமைப்படுகின்ற உரோமா புரிச் செல்வர் லுர குலஸ் டuculus) என்பவரது நூலகமாகும். இவர் கி. மு. 117-54ல் வாழ்ந்தவர். இவரது நூலகத்தைப் பற்றிப் புளுடார்ச் Plutarch) என்பவர், இத்தகைய ஒரு சிறந்த நூலகத்தை நிறுவியதற்காக லூகுலன ச நாம் வாயார வாழ்த்த வேண்டும். இது பெருமைக்குரிய, புகழ்வ ய்ந்த செயலாகும் . அவர் அரிதின் முயன்று கிடைத் தற் கரிய சுவடிகள் பலவற்றைச் சேகரித்து இந் நூலகத்தில் வைத்துள்ளார். அவற்றைப் பெறுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சியின் அளவு பெரியது; அதற்காக அவர் செலவழித்த பனம் கரிைச மானது. மேலும் தாம் சேகரித்து வைத்துள்ள சுவடிகள் நன்கு பயன்படுத்தப்படவேண்டும் என்பதற்கு அவர் வகுத் திருந்த வழிவகைகள் பாராட்டிற்குரியனவாகும். அந்து ல கத்தின் கதவுகள் எந்நேரமும் அடை க்கப்படாமலிருந்தன. அந் நூலகத்தின் வாயில்களில் எல்ல. க் கிரேக்கர்களும் நுழைவதற்கு அனுமதி உண்டு. அவ்வாறே அவர்கள் அந் நூலகத்தில் உண்ள படிப்பறைகள் அனைத்திற்கும் சென்று, அமர்ந்து படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது’ என்று பலபடப் பாராட்டிக் கூறியுள்ளார். முன்னர்க் கூறியவாறு முதன் முதலாக உரோமாபுரியின் மாவீரர்கள் பிறநாடுகளை வென்று, அந்நாடுகளிலுள்ள 44.