பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வங்கள் அனைத்தையும், தங்களது நாட்டிற்குக் கொண்டு வரும்பொழுது ஆங்காங்கே கண்ட நூல் தொகுதிகளையும் உடன் கொண்டுவந்தனர். ஒரு சிலர் அவற்றைத் தங்கள் சொந்த உபயோகத்திற்காக வைத்துக்கொண்டனர். மற்றும் சிலர் அவற்றை அனைவரும் பயன்படுத்தக்கூடிய நிலையில் சேகரித்து, வகுத்துத் தொகுத்து வைத்திருந்தனர். அதே நேரத்தில் செல்வச் சீமான்களும், நூல்களைச் சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டினர். அடுத்து உரோமாபுரியை ஆண்ட மாவீரர்களும் நூல்களைச் சேகரித்து, பொது நூலகங்களை நாடெங்கனும் நிறுவ வேண்டும் என்று விரும்ப லாயினர். அதற்குரிய முயற்சியிலும் ஈடுபட்டு ஒரளவு வெற்றியும்ண்ெடனர். உரோம புரியின் பழம்பெரும் பொது நூலகங்கள் 500 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்புடையன ஆகும். இனி அப்பழம் பெரும் நூலகங்கள் பற்றி சிறிது கூறுவோம். மாவீரர் ஜூலியஸ் சீசர் தமது நாட்டில் பொது நூலகங் கஃாத் தோற்றுவிக்கவேண்டுமென் று பெரிதும் விரும்பிளுர். அதற்கான முயற்சியினை யும் அவர் மேற்கொண்டார்; பல திட்டங்களையும் வகுத்தார். ஆனல் அத்திட்டங்கள் அவர் காலத்தில் நடைமுறைக்கு வராமல் போய்விட்டன. ஏன்? பேரரசர் அகஸ்டஸ் ஆட்சிக் காலம் தொடங்குகின்றவரை யிலும் அத் திட்டங்கள் .ெ ச ய ல் ட டு த் த ப் .ெ ப ற வி ல் லை. உரோமாபுரியில் முதன்முதலாகப் பொது நூலகம் ஒன்றினைத் தொடங்கிய பெருமை அசினியஸ் போ லியோ வையே சாரும். இந்நூலகம் கி. மு. 39-ம் ஆண்டிற்கும் 27-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்று வரலாற்ருசிரியர்கள் க ரு து கி ன் ற ன ர். அந்நூலகத்தைத் தொடங்கிய போலியோ (Pollio) ஒர் எழுத்தாளர் ஆவார். எனவே உரோமாபுரியின் முதல் பொது நூலகத்தைத் தோற்றுவித்த சிறப்பு ஒர் எழுத்தா ளர்க்கே உரியது. இதற்குப் பிளேரிை, ஒவிட் என்பவரின் எழுத்துக்கள் சான்று பகரு கின்றன. அதன் பின்னர் அகஸ்ட் ஸ் இரண்டு பொது நூலகங் களைத் தொடங்கிவைத்தார். அவை முறையே ஆக்டா வியன் (Octavian), ureusot să (Palatine) நூலகங்கள் ஆகும். 45