பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிகளார் வாழ்த்துரை தவத்திரு குன்றக்குடி 623 206 குன்றக்குடி அடிகளார் இராமநாதபுரம் மாவட்டம் 29–3–75 அன்புள்ள நமது அருங்கலைக்கோன் அ. திருமலை முத்துசுவாமி அவர்களுக்கு எல்லா நன்மைகளும் பெருக அண்ணுமலை அண்ணலின் திருவருளைச் சிந்தித்து வாழ்த்து கின்ருேம். தாங்கள் எழுதிய நூலகவியல் சிந்தனைகளை'ப் படிக்கும் இனிய வாய்ப்புக் கிடைத்தது. தமிழ்நூல் உலகில் இஃதொரு புதிய முயற்சி நூலகப் பணி நிலைகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை விளக்கி உள்ளமை பாராட்டத்தக்கது. தாங்கள் எழுதியுள்ளதுபோல நூலகம் அமைந்து நூலகரும் பணி செய்தால் பல நூற்களைக் கற்கும் ஆர்வம் வளரும், அவ்வழி தேக்கம் அடைந்துள்ள தமிழகத்தின் சிந்தனை உடைபடும்; அறிவுப் பெருக்கெடுக்கும்; சமுதாய மாற்றங் கள் ஏற்படும். தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் மு. வ. அவர் கள் எழுதிய நூற்களைப் பற்றிய திறனாய்வு மிக அழகாக அமைந்துள்ளது. கலைஞரின் நடை உண்மையான செய்தி: தமிழக நூலகத்துறைக்குத் தாங்கள் செய்துவரும் பணிகள் பாராட்டுதலுக்குரியன. நூலக நண்பர்கள், நூல கக் காதலர்கள் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளனர். இன்ப அன்பு. அடிகளார்