பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்விரண்டு நூலகங்களும் வரலாற்றுச்சிறப்பும், தொன்மைச் சிறப்பும் உடையனவாகும். இ வ் வி ரு நூ ல க ங் க ளி லு ம் கிடைத்ததற்கரிய மூலங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. சுருங்கக் கூறின் இன் விரு நூலகங்களும் உரோமாபுரியின் கல்விச் செல்வங்கள் அனைத்தையும் கொண்ட கருவூலங்களாக விளங்கின. ஆனால், அவைகள் பிற்காலத்தில் பகைவர்களால் எரியூட்டப் பெற்றமை வருந்துதற்குரியதாகும். கி. பி. நான்காவது நூற்ருண்டின் இடைக்காலப்பகுதியில் உரோமாபுரியில் குறைந்தது இருபத்தெட்டுப் பொது நூல கங்கள் பொதுக் கல்விப் பணியில் ஈடுபட்டிருந்தன என்று பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். அரசன் முதல் அடிமை ஈருக, எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் அப்பொது நூலகங்களேப் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்க செய்தி ஆகும். மற்ருெரு நினைவுகூரத்தக்க செய்தி, பொது நூலகங்களை நிறுவுவதில் உரோமாபுரிப் பேரரசர் களும், செல்வச் சீமான்களும் பெரிதும் அக்கறையும் ஆர்வமும் காட்டியமையாகும். எனவே, அந்நூலகங்கள் பாரோர் வியக்கும் வண்ணம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கின, நாளடைவில் உரோமாபுரி ஆட்சியில் அடங்கியிருந்த எல்லா மாநிலங்களிலும், இத்தாலியைச் சேர்ந்த எல்லா நகரங் களிலும், பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. இந்நூலகங் களில் இருந்த மூலங்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு பிரிவு கிரேக்க நூல்களைக்கொண்டது; மற்ருெரு பிரிவு உரோம இலக்கியங்களையும் பிற நூல்களையும் கொண்டது. மேற்குறிப்பிட்ட பொது நூலகங்களில் புகழ் வாய்ந்த தாகக் கருதப்படுகின்ற நூலகம், உல்பியன் (Ulpian) நூலக மாகும். இந்நூலகம் உரோமாபுரி ஆட்சியில் நிறுவப்பட்ட பழம்பெரும் நூலகங்களில் குறிப்பிடத்தக்க, முன்மாதிரியான நூலகம் ஆகும். இந்துாலகத்தில் ஒரு மருங்கில் கிரேக்க நூல்களும் பிறிதோரிடத்தில் இலத்தின் நூல்களும் வைக்கப் பட்டிருந்தன, அவைகள் நூால் நிலையடுக்கின் தட்டுக்களிலோ அன்றிக் கொள்கலங்களிலோ (Bins) பொருள்வாரியாகப் 46