பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரித்துத் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக நூல்களை மக்கள் படிப்பறைகளுக்கு எடுத்துச் சென்று பயன் படுத்தினர். உரோமாபுரியின் பழம்பெரும் பொது நூலகங்களைப் பற்றி எழுதியவர்கள் அவைகளைப்பின் வருமாறு வருணித் துள்ளனர். ஒவ்வொரு பொது நூலகத்தின் வாயிலிலும் அறிவாற்றலுக்குரிய பண்டை உரோமாபுரியின் பெண் தெய்வமாகிய மினரிவாவின் (Minerva) சிலை காணப்பட்டது. தலைசிறந்த எழுத்தாளர்களின் மார் பளவு ஆன தலைச் சிலே களும், உருவப் படங்களும், படிப்பறையினை அலங்கரித்தன. பகலவனது காலை இளங்கதிர்கள் தருகின்ற ஒளியினைப் பெறும் வகையில் அதாவது இயற்கை வெளிச்சம் தங்கு தடையின்றி உள்ளே புகும் வகையில் படிப்பறையானது கிழக்குத் திசையை நோக்கியே கட்டப்பட்டிருந்தது. தரை யில் இளம் பச்சை நிறத்தைக் கொண்ட பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நூலகங்களை அழகுபடுத்துவதில் ஒரு சில வேளைகளில் உரோமர்கள் அரிதிற் கிடைக்கும் பொன்னே யும் பயன்படுத்தினர். அணி செய்யப்பட்ட மர நிலையடுக்கு களில் காணப்பட்ட சிறு அறைகளில் கோரையின் நீர்ப் பூண்டிலிருந்து செய்த வரைதாள் சுருள்களாலாய நூல்கள் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சுருளிலும் அதற்குரிய எண்ணைக்கொண்ட சீட் டு இணைக்கப்பட்டிருந்தது. இவ்வெண், இந்நூலினை அடையாளம் கண்டுகொள்வதற்கு, நூலக நூற்பட்டியில் குறிக்கப்பட்டிருந்த எ ன் ளு கு ம். இச்சுவடிகளை ஈரக்கசிவு அல்லது ஈரப்பற்று ஊடுருவி அழித்து விடாமல் இருத்தற் பொருட்டு, அது புகாத நிலையில், வெளிச் சுவரின் உட்புறத்தே சுமார் ஒரடி அல்லது இரண்டடி துாரத்தில் இரண்டாவது சுவர் எழுப்பப்பட்டிருந்தது. பொது நூலகத்தின் நூலகர் ஒர் உயர்தர அதிகாரியாக அனைவராலும் கருதப்பட்டார். மேலும் சமுதாயத்தில் அவருக்குப் பெரு மதிப்பும் உயர்ந்த நிலையும் கொடுக்கப்பட்டிருந்தன. அவர் தமது நூலகத்தில் காணப்பட்ட அறிவுச் செல்வங்களே நன்கு காத்து ஓம்பியதோடு மறையாகவும் அவற்றை மக்களுக்குக் கொடுத்துதவினர். வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கின்ற வாய்ப்பினையும் அவர் மக்களுக்கு வழங்குவதில் தடை ஒன்றும் 47