பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யவில்லை. மாருக மக்கள் அறிவுச் செல்வங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று, படித்து விட்டு உரிய நேரத்தில் திருப்பித் தருவதில் ஒர் ஒழுங்கினே க் கடைப்பிடிப்பதில் உறுதுணை யாக விளங்கினர். மேலும் அவர்கள் மக்களது படிக்கின்ற ஆர்வத்தைப் பல வழிகளில் துரண் டவும் செய்தனர். எனவே, உரோமாபுரியின் பழம்பெரும் பொது நூலகங்கள் தங்கள் கடமைகளேச் சரிவர ஆற்றிப் பேரும் புகழும் பெற்றதில் வியப்பொன்றும் இல்லையன்ருே. அரிய பெரிய கல்விச் செல்வங்கள் பலவற்றைக் கொண்டு விளங்கிய பழம்பெரும் உரோம நூலகங்கள் இறுதியில் நெருப்பிற்கு இரையாயின. காட்டு மிராண்டிகள் பலரது படையெடுப்பிற்கு ஆளாகிப் பழம் பெருமை யுடைய உரோமாபுரி அழிந்து பொழுது இவ்வரிய நூலகங்களும் பகை வர் மூட்டிய எரிக்கு இரைய யின. பகைவரின் சீற்றத்திற்கு இரையாகிச் சிதையுண்ட இருபெரும் நகரங்களாகிய பாம்பே (Pompeii}, Garoffes sorr gofuuth (Herculaneum) =2, stuua bốlair மூலம்தான் இந்நூல்களைப் பற்றி இன்று நம்மால் அறிய முடிந்தது. அதாவது அவற்றைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதற்குறிய சின்னங்கள், சான்றுகள் அப்பாழடைந்த நகரங்களில் தான் கிடைத்தன. மேற்கூறிய இரு நகரங்களும் இ.பி.79இல் வெசுவியஸ் (Vesuvius) என்பவரால் தரைமட்டம் ஆக்கப்பட்டன. அழிந்த ஹெர்குலானியம் நகரில் கண்டு பிடிக்கப்பட்ட நூலகத்தில் நூற்றுக்கணக்கான பேபிரஸ் சுருள்களாகிய சுவடிகள் காணப்பட்டன. அவைகள் அழகிய நிலையடுக்குப் பேழைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அப்பேழைகள் ஒர் அறையின் நாற்புறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவ்வறையின் மத்தியில் மேசை ஒன்று காணப்பட்டது. இந்நூலகத்தின் துணையால் உரோமா புரியின் பழம்பெரும் நூல்களைப் பற்றிப்பல அரிய செய்திகளே நாம் அறிய முடிந்தது. எனவே நாம் அதனே உரோமாபுரியின் பழம்பெரும் நூலகங் கரின் நினைவுச் சின்னம் என்று உரைக் கினும் அது மிகையாகாது. 48