பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஒரே ஒரு ஊரிலே "ஒரே ஒரு ஊரிலே’ என்று வீட்டிலிருக்கும் தாத்தாவோ பாட்டியோ கூற ஆரம்பித்தவுடன் மூலைக்கொருவராக இருந்து வீட்டில் அமளி செய்து கொண்டிருக்கும் பேரக் குழந்தைகள், அதனை நிறுத்தி விட்டு, தாத்தாவையோ, பாட்டியையோ சூழ்ந்து, அமைதியாக அமர்ந்து, ஆவலுடன் கதை கேட்க விரும்புவது வீட்டில் அன்ருடம் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்ருகும். அவர்கள் கதை இன்பத்திலே தங்களை மறந்து ஆடாது, அசையாது அமர்ந்து, “உம் உம்' என்று கூறி, கதை கூறுகின்றவரை முடுக்கிக்கொண்டே இருப்பர். நாமும் இளமையில் இத்தகைய அநுபவத்தைப் பெற்று மகிழ்ந்ததுண்டு. ஏன்? இன்று கூட, யாராவது கதை சொல்ல ஆரம்பித்தால், அக்குழந்தை உணர்வினை நாம் பெற்று ஆவல் மேலிடக் கேட்க ஆரம்பித்து விடுகிருேம் அல்லவா? சில பெற்ருேர்கள் இரவு நேரத்தில் ஒய்வாக இருக்குங் கால் தங்களது குழந்தைகளுக்கு தல்ல நல்ல கதைகளேச் சொல்லி மகிழ்கின்றனர். வயதானவர்கள் கதை கூறுவதின் மூலம் பேரக்குழந்தைகளின் பேரன்பைப் பெறுகின்றனர்; அவர்களை அடக்கி ஆளுகின்றனர்; நல்வழிப்படுத்துகின்றனர்; நல்ல கருத்துக்களை, உண்மைகளே அவர்களது உள்ளத்திலே பதியச் செய்கின்றனர். இவ்வாறே இன்று பள்ளிகளிலும் பாடம் சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள் கதை சொல்லு வதை மேற்கொண்டு சிறந்த உண்மைகளைக் குழந்தைகள் எளிதிற் புரிந்து கொள்ளச் செய்கின்றனர். கருங்கக் கூறின், சிறுவர்களிடையே கதைக்கு இருக்கும் செல்வாக்கு வேறெதற் கும் இல்லையெனக் கூறிவிடலாம். 49 4-bی