பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை கூறுவதைச் சிறந்த கலையாக அமெரிக்க நாட்டவர் எண்ணுகின்றனர். அதுவும் நூலகத் துறையில் பணிபுரிவோர் அவ்வாறு கருதுகின்றனர். அவர்கள் அதனைச் சிறந்த கலையாக வளர்த்துப் போற்றி வருகின்றனர். செல்வம் கொழிக்கும் அச்சீமைக்கு நான் சென்றிருந்த பொழுது மிகப்பெரிய நூல கங்களையும் மிகச் சிறிய நூலகங்களையும் பார்த்து மகிழ் வதற்கு உரிய வாய்ப்பைப் பெற்றேன். அதுகால், என் உள்ளத்தைக் கவர்ந்த பகுதி, பொது நூலகங்களில் நிறுவப் பெற்றிருக்கும் குழந்தைகளுக்குரிய பகுதியாகும். உலகில் பெரிய நூலகமாகிய காங்கிரசு நூலகம், அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நூலகமாக விளங்கும் நியூயார்க் பொது நூலகம் போன்ற பெரிய நூலகங்களும் கூட, குழந்தைகள் பகுதியினை நிறுவி அதனைக் கண்ணும் ககுத்துமாகக் காத்து வருகின்றன. குழந்தை இலக்கியங்களைச் சேகரிப்பதில் அவை பெரிதும் அக்கறை காட்டுகின்றன. சேகரித்து வைப்பதோடு அவை நின்று விடுவதில்லை. குழந்தைகள் படித்துப் பயன் பெறுவதற்குரிய வழி வகைகளை எல்லாம் செய்கின்றன. அமெரிக்கப் பொது நூலகங்களின் முக்கியமான பிரிவு களில் ஒன்ருக இன்று குழந்தை நூலகம் விளங்கிக் கொண்டி ருக்கின்றது. அது ஆற்றும் பணிகளில் குறிப்பிடத்தக்கது, 'கதை கூறும் பசிையாகும். எல்லாக் குழந்தைகளும் கதை கேட்பதைப் பெரிதும் விரும்புவதால், கதை கூறப்படும் நேரத்தில் அவர்கள் தவருது நூலகத்திற்கு வந்து விடுகின்ற னர். குழந்தை நூலக அதிகாரிகளாகப் பணியாற்றுவோர் அது கால் சிறந்த இலக்கியத்தை, இலக்கியக் கருத்துக்களை, ‘கதை’ என்னும் தேனிலே குழைத்து ஊட்டுகின்றனர். அவரி களும் அதனை அருந்தி அக மகிழ்கின்றனர். அப்பழுக்கில்லாத அவர்களது நெஞ்சத்தில் அக் கருத்துக்கள் பசுமரத்தாணி போல் பதிகின்றன. பள்ளி செல்லாத குழந்தைகளுக்குக் கதை நிகழ்ச்சி குழந்தை நூலகங்கள் மூன்று வயதிற்குமேல் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காக நடத்துகின்ற கதை திகழ்ச்சியைக் கானுகின்ற நமக்கு, வியப்பு ஏற்படாமல் 50