பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்காது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்ற குழந்தைகள் பின்வரும் அநுபவங்களைப் பெறுகின்றனர் : 1. அனைவரும் ஒரிடத்தில் ஒன்ருகக் கூடி மகிழ்தல்; 2. அவ்வாறு பலரைச் சந்திக்கின்றகால் எவ்வாறு தடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிதல்; 3. அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்ளுதல்; 4. நூலக அதிகாரி கதை கூறுகின்றகால் கவனமாக அதனேக் கேட்டு மகிழ்கிதல்; 5. கண்ணுக் கினிய வண்ணப் படங்களைக் கண்ணிமைக் காது பார்த்து அதன்மூலம் அறிந்த கதையினை, கருத்தினை உள்ளத்தமைத்தல்; 6. தங்களுக்குரிய நூல்களைப் பற்றி அறிந்து கொள் வதற்குரிய வாய்ப்பைப் பெறுதல்; 7. வீட்டிற்குச் சென்று படிப்பதற்காக நூல்களை எடுத் துச் செல்லுகின்ற பழக்கத்தினை முதன் முதலாகப் பெறுதல்; or 8. பிறவற்தைப் பற்றி அறியும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்; 9, இவற்றிற்கெல்லாம் மேலாக சிறந்த குழந்தை நூல் களைப் படித்துப் பயன்பெறுதல். கள்ளமில்லா உள்ளம் உடைய இக்குழந்தைச் செல்வங் களுக்கு நடத்தப்பெறும் கதை நிகழ்ச்சியினை மிகக் கவன முடன் நூலக அதிகாரிகள் அமைக்க முயலுகின்றனர்: முன் கூட்டியே திட்டமிட்டு அதனைச் செயல்படுத்தி நல்ல வெற்றி யினையும், பாராட்டினையும் பெறுகின்றனர். குழந்தைகளது உள்ளத்திற்கு உவகை ஊட்டும் வகையில், கதைகளைக் கேட்குங்காலும், அவ்வாறே நூல்களைப் பெற்றகாலும் பேரின்பத்தைப் பெறும் நிலையில் கூடிவாழ்வதில் இருக்கின்ற 5 *