பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமை பெருமைகளை அறியும் வகையில் கதை நிகழ்ச்சிகள் பொது நூலகங்களால் அமைக்கப்பெறுகின்றன. எனவே இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகளின் பெற்ருேர்கள் பெரிதும் மகிழ்கின்றனர்; இதனைப் பெரும் பேருகக் கருது கின்றனர். * -- கதை நிகழ்ச்சிபற்றி நூலகம் முன்னதாகவே அறிவித்து விடுகின்றது. பதினைந்து அல்லது இருபது குழந்தைகளே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். இதற்குக் காரணம் அவர்கள்மீது அதிக கவனம் செலுத்தமுடியும் என்பதே ஆகும். குழந்தைகள் எவ்வித சிரமமுமின்றி கதை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்குரிய வசதிகள் அனைத்தும் செய்ததுரப் படுகின்றன. எளிமையான கதைகளே அவர்கள் மனங் கொள்ளும்வண்ணம் முதலில் கூறப்பெறுகின்றன. அமைதி யான, ஆளுல் கவர்ச்சியான அறையிலே இந்நிகழ்ச்சி நடத்தப் பெறுகிறது. வண்ணப் படங்களுடன் கூடிய நூ ல் களி ல் சிறந்தவற்றைத் தெரிந்து எடுத்து, கண்ணுக்கினிய காட்சி களைக்கொண்டிலங்கும் பக்கங்களை விரித்து வைத்து வருகின்ற குழந்தைகளது கண்ணேயும் கருத்தையும் ஒருசேரக் கொள்கள கொள்ளும் வண்ணம் நூ ல் அறிமுக த் தை நூலக அதிகாரிகள் செய்கின்றனர். அதாவது படங்களுடன் கூடிய நூல்கள் காட்சிப்பொருள்களாக அவ்வறையில் வைக்கப் படுகின்றன. குழந்தைகள் வசதியாக இருத்து கேட்பதற்குரிய நிலையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.வேலைப்பாட்டுடன் கூடிய சிறிய நாற்காலிகளும், குந்து மனைகளும் (Stools) குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன. சில நூலகங்கள் கீழே மெத்தையினைப் பரப்பி வைக்கின்றன. கதை கூறுபவர் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து, தான் வைத்திருக்கும் நூல் அனைவரது கண்ணிலும் படும்வண்ணம் அதனை வைத்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்கிருர். அவரது இருக்கைக்கு எதிரில் அரை வட்டமாகக் குழந்தைகளுக்கு இருக்கைகள் போடப்படுகின்றன. அதுவே மிகவும் வசதியாக இருக்குமென அனைவராலும் கருதப்படுகின்றது. குழந்தைகளது வயதிற்கேற்பக் கதைகள் நூலகரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. முன்னர் குறிப்பிட்ட குழந்தை 52