பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுக்கு, புலன்களால் அறியப்படும் உண்மைகள், இயற்கை விந்தைகள், வாழ்க்கையின் ஆரம்ப நிகழ்ச்சிகள் முதலியவை பற்றிய எளிய கதைகள் கூறப்படுகின்றன. அவ்வாறு கூறப்படுகின்றதால் கற்பனைக்கு அதிக இடம் தராது உள்ளதை உள்ளவாறு உணர்ச்சி குன்ருது சொல்வதற்கு நூலகர்கள் பெரிதும் முயல்கின்றனர். விலங்குகளைப்பற்றிய கதைகளை இப்பருவத்தினர் பெரிதும் விரும்புகின்றனர். இவ்வாறே இயந்திரங்களைப்பற்றிய கதைகளிலும் ஆர்வம் உடையவராக விளங்குகின்றனர். தொடர்வண்டி, நீராவிச் கப்பல், படகு, தீயணைக்கும் இயந்திரம், நெய்யாவி ஊர்தி முதலியவற்றின் கதைகளே அவர்கள் விரும்பிக்கேட்கின்றனர். வானிலைபற்றிய செய்திகளையும் அவர்கள் அறிய விரும்பு கின்றனர். = சில நூலகங்கள் பதிவேடு ஒன்று வைத்துள்ளன. கதை நிகழ்ச்சிக்குத் தங்கள் குழந்தைகளே அனுப்ப விரும்பும் அன்னையர் முன்னரே அப்பதிவேட்டில் அதுபற்றிக் குறிக்க வேண்டும். ஒரு குழுவினைச் சார்ந்தோர் அக்குழுவிலேயே எப்பொழுதும் இருக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்நிலையில் உள்ளோர் புதியவர்களை விரும்புவதைவிட, ஏற்கெனவே அறிந்தவர்களையே விரும்புகின்றனர். இக்குழந்தைகளுக்குரிய கதை நிகழ்ச்சி ஏறத்தாழ அரை மணி நேரம் நடை பெறுகிறது. கதை கூறுகின்றவர், மெதுவாக, அதே நேரத்தில் தெளிவாக, கதையினைக் கூறுகின்ருர். அவ்வாறு கூறுங்கால் முதலில் கதை நிகழ்ச்சிகளை விளக்கும் ப ட ங் க கள ஒவ் வொன்முகக் காட்டி, அதே நேரத்தில் அது சித்திரிக்கும் நிகழ்ச்சியைப்பற்றியும் விளக்குகின்ருர். குழந்தைகள் அவர் கூறுவதைக் கேட்கும் வகையிலும், அவர் காண்பிக்கின்ற படத்தினைக் கண்டு களிக்கும் வகையிலும் அவர்களுக்கு அவகாசம் தரப்படுகின்றது. மேலும் அன்றையப் பொருள் பற்றிக் கூறும் சிறு பாடல்கள் இரண்டினைப் பாடிக் காட்டுகிருர். சில குழந்தைகள் மேலும் சில பாடல்களை விரும்பினால், நூலகர் மனங்கோனது மகிழ்ச்சியுடன் மேற் கொண்டு சில பாடல்களை அவர்களுக்குப் பாடிக் காட்டுகிருர் . பாடலுக்கேற்ப மெல்லிய இசையும் எழுப்பப் பெறுகின்றது. பாடலும் இசையும் கதை நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்று கின்றன: உயிர் ஊட்டுகின்றன. 53