பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை நிகழ்ச்சி அரைமணி நேரத்திற்கே தயாரிக்கப் படுகின்றது. குழந்தைகள் வந்து அமர்ந்ததும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் நூலகர் அவர்களுடன் ஐந்து நிமிடங்கள் அன்று நடைபெற விருக்கும் கதை நிகழ்ச்சியினைப் பற்றிப் பேசுகின்ருர். பின்னர் அவர் கதை கூறுவதற்கு இருபது நிமிடங்கள் எடுத்துக்கொள்கிரு.ர். இறுதியாக உள்ள ஐந்து நிமிடங்கள் ஆடல் பாடல்களுக்கோ அன்றி விரல் விளையாட்டிற்கோ ஒதுக்கப்படுகின்றன. இது சில குழந்தைகளிடம் காணும் அவைக் கூச்சத்தை அகற்றுவதற் குத் துணை செய்கின்றது. குழந்தைகளுடன் நூலகத்திற்கு வரும் அன்னையர்க் கென்று தனி நிகழ்ச்சி நூலகத்தினரால் அமைக்கப்பெறு கின்றது. இல்லையேல் அவர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை எடுத்துப் படித்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் ஒய்வு எடுத்துக்கொள்கின்றனர். கதை முடித்ததும் அவர்கள் வந்து குழந்தைகளே அழைத்துச் செல்லுகின்றனர். அதுகால் கதை நிகழ்ச்சி பற்றி நூலக அதிகாரி அவர்களுக்கு அறிவிக் கின்ருர். | பிஞ்சுள்ளம் கொண்ட இக் குழந்தைகளுக்குப் புரியும்' இப்பணியினல் நூலக அதிகாரிகள் மன மகிழ்வினையும், மனநிறைவினையும் பெற்றுத் திழைக்கின்றனர். எனவே அவர் கள் இப்பணி ஒன்றே இம்மாநிலத்தில் மகத்தான பணியாகும் என்று கருதுகின்றனர். ஆர்வமும் அக்கறையும் உடைய இக்குழந்தைகளுடைய வருங்கால, வளமான வளர்ச்சிக்குத் தாங்களே காரணம் என்று இறுமாப்புக் கொள்கின்றனர். உண்மையும் அதுவே ஆகும். இளமையில் குழந்தைகள் பெறுகின்ற இப்பயிற்சியே அவர்களது வாழ்நாள் முழுவதும் வழிகாட்டுகின்றது. ul-Isles, someo uly $65th flaspé à (Picture Book Programme) ஐந்திலிருந்து ஏழு வயது வரை உள்ள குழந்தைகளுக் காக இந் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. இந் நிகழ்ச்சியின ஒரு சில நூலகங்கள் மாதத்திற்கு ஒரு முறையும், சில நூல கங்கள் வாரத்திற்கு ஒரு முறையும், மற்றுஞ் சில நூலகங்கள் 54.