பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டு முழுவதும் நடத்துகின்றன. ஒரு சில நூலகங்களில் கதை நிகழ்ச்சி நடக்குங்கால் இந்நிகழ்ச்சியும் நடக்கின்றது. மேலே குறிப்பிட்ட குழந்தைகள் சிறிது வயது முதிர்ந்த காரன்னத்தால் சிறுகதைகளைக் கேட்பதை விட, படமிகு நூல் களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவோர் பின்வரும் பயன்களைப் பெறுகின்றனர். 1. படங்களின் வழியாகக் க ைது நிகழ்ச்சிகளைத் தங்களது மனக் கண்ணுல் கற்பனை செய்து கண்டு உவகை பெறுதல் ; 2. அழகிய பட விளக்கங்களைக் காணுவதன் மூலம் கலை யுணர்வை, அதாவது அழகுணர்ச்சியினைப் பெற்று மகிழ்தல்; 3. பாவின் சந்த இன்பத்தை அநுபவித்துப் பேரின்பம் அடைதல். அதாவது செய்யுள் விளக்கப்படங்களைப் பார்த்து மகிழும் நேரத்தில், செய்யுளை ஓசையுடன் படித்து மகிழ்தல் ஆகும். பள்ளி செல்லும் குழந்தைகளே இதில் பங்கு பெறுவதால், விடுமுறை நாட்களில் அல்லது மாலை நேரத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றது. குழந்தை நூலகத்தில் மிகக்கவர்ச்சியான இடத்தில் இந்நிகழ்ச்சி நடக்கின்றது. குழந்தைகளது உள் ளத்தை ஈர்க்கும் வகையில் இப்பகுதி அழகுடன் விளங்கு கின்றது. குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய நூல்களும், இசையும் இந் நிகழ்ச்சியின் முழு வெற்றிக்குப் பெரிதும் துணை செய்யும் என்பது நூலக அதிகாரிகளின் கருத்தாகும். இருபதிலிருந்து முப்பது மாணவர்கள் வரை இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அரை மணி நேரமே இதற்கு ஒதுக்கப்படுகிறது. நூலக அதிகாரி அந் நூல்களைப் பற்றி நன்ருக அறிந்து வைத்துள்ளார். நீண்ட கதைகளைக் கொண்ட படமிகு நூல்களையே இப்பருவத்தினர் விரும்புகின்றனர். படங்களை நன்கு பார்க்க இவர்கள் விரும்புவதோடு, கதையினையும் கவனமாகக் கேட்டு மகிழ் கின்றனர். 55