பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை கொண்டல் சு. மகாதேவன், பி. எஸ்.சி., எம். ஏ., தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழக அரசு. நூலகவியல் சிந்தனைகள்’’ என்ற திரு. அ. திருமலைமுத்து சுவாமியின் இனிய நூலைக் கையிலெடுத்திடும் எவரும் சிந்தனே யுலகில் ஆழ்ந்துவிடுவர் என்று சொல்லவேண்டுவதில்லை. இன்றைய செல்வச் சிருர்களை நூலுலகிற்கு எங்கனம் வழிப் படுத்துவது என்பது பற்றிச் சிறந்த கருத்துக்களைப் பல்வேறு. தலைப்பில் கூறி நமது சிந்தனையைச் செயல்படச் செய்கின்ருர், நம் சிந்தனை ஒரு முடிவினை மேற்கொள்கின்றது. இருக்க வேண்டுவது வீட்டுக்கொரு நூலகம். இருக்க வேண்டாதவர் பள்ளிக்கொரு துரோணர். பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏகலைவனுக்குப் பள்ளியில் இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டதும் வீட்டில் பயிற்சிக் கூடத்தை-ஒரு நூலகத்தை-உருவாக்கித் தனது தனிப் Litą Lia oli (Private Study) 916i6ör தொடங்கினன்; கேட்பன கேட்டுக் கற்பன கற்றுப் பயில்வன பயின்று பள்ளியின் முதன் மாணவனை அர்ச்சுனனிலும் மேம்பட்டவனுகிவிட்டான். அது மட்டுமன்று ஒப்பித்த பாடத்தையே திருப்பித் திருப்பி ஒப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர் துரோணரது அறிவு நிலைக்கும் அப்பாற்பட்டதாக ஏகலைவனது நூலகவுணர்வோடு கூடிய கலைத்திறம் எழில் வீசித் திகழ்ந்தது, "எனக்குத் தெரியாத வித்தையை எவனுக்கோ துரோணர் கற்றுக் கொடுத்துவிட்டார்” என்று அர்ச்சுனன் குமுறின்ை. "எனக்கும் தெரியாத வித்தையை எவனே தெரிந்து வைத் திருக்கின்ருனே’ என்று துரோணர் வெளிச் சொல்லவும்