பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& so; tālaspé à (Story Hour) நல்ல கதையினைத் தேர்ந்தெடுத்தல் ஒரு சிரமமான பணியே. அதன் பொருட்டு நூலகர்கள் மீண்டும் மீண்டும் ஒரு நூலேப் படிக்கின்றனர். பின்னர் அந் நூலில் ஏதாவது புதிய கருத்துக்கள் அல்லது அம்சங்கள் கானின் அவர்கள் அக்கதை நூலேத் தேர்ந்தெடுக்கின்றனர். கதையினைத் தொடங்குவதற்கு முன்னர் அவர்கள் நாடகச் சுவையும், இலக்கியக் சுவை புல், மனிதாபிமான உணர்வும், கதை அமைப்பும் கொண்ட மரபு வழிக் கதைகளைச் சொல்லு கின்றனர். அவ்வாறு அவர்கள் சொல்லுகின்றபொழுது பேச்சு வழக்கு மொழியினேயே கையாளுகின்றனர். உணரிவு குன்முல்ை இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு சிலர் ஆடியும், அசைந்தும், பாடியும், ஒடியும், ஒலி எழுப்பியும், நடித்தும் உற்சாகத்துடன் அக்கதைகளைக் கூறுகின்றனர். பின்னர் அம்மரபு வழிக் கதைகளையும், பிற கதைகளையும் கொண்டிலங்கும் கஆை நூல்களைப் படித்துக்காட்டுகின்றனர். இந்நிகழ்ச்சி நடைபெறும் அறை அமைதி நிறைந்ததாக விளங்குகிறது. சொல்லப் போகும் கதையின் சம்பந்தப்பட்ட நூல்களணேத்தும் மேசையின் மீது அழகாக அடுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன. கண்ணுடிக்குவளைகளில் வண்ண மலர்கள் வைக்கப்பெறுகின்றன. நீண்ட மெழுகுவர்த்தி ஒன்று மேசை யின் மீது இருக்கும். ஆழத் ைஇகள் அகறையின் உள்ளே வந்ததும், அவர்களது மேலங்கிகளையும், நூல்களையும் நூலகர் ஒசி இடத்தில் வாங்கி வைத்துவிட்டு, அவர்களை அமைதியாக அமரும்படிச் செய்கிரு.ர். அவர்கள் வசதியாக இருக்கைகளில் அமர்ந்ததும், கதையைத் தொடங்குவதன் அறிகுறியாக மேசையின் மீது விளங்கும் மெழுகுவர்த்தி கொளுத்தப் படுகின்றது. மெழுகுவர்த்தி எரிய ஆரம்பித்ததும் அங்கு ஆழ்ந்த அமைதி நிலவுகின்றது. அதுகால் நூலகரது குரல் கணிரென்று ஒலிக்கத் தொடங்குகின்றது. கதை முடியும் வரை யாரும் பேசுவதில்லை. கதை முடிந்ததும் எரியும் மெழுகுவர்த்தியினைக் குழந்தைகள் வாயால் ஊதி அனேக் கின்றனர். நூலகர் கதை நூலை மூடி வைத்துவிடுகின்ருர், குழந்தைகள் அமைதியாகக் கலைந்து செல்லுகின்றனர். T 56 :