பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை நூலகர் பயிற்சி குழந்தை நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களுக்குச் சில தனித் திறமைகள் வேண்டும். இத்துறையில் பணிசெய்ய விரும்புவோர், நூலகவியற் கல்வி பயிலுங்கால் ' குழந்தை இலக்கியம்’ என்னும் விருப்பப் பாடத்தைப் பயிலுகின்றனர்: கதை கூறுவதற்குரிய பயிற்சியினே யும் பெறுகின்றனர்: அத்திறமையினை வளர்க்கவும் செய்கின்றனர். இத்துறையில் ஈ டு ப டு .ே வார் க் கு, பிறரை வயப்படுத்தும் இயல்பும், கம்பீரமான குரலும், நடிப்புத்திறனும், சொல்லாற்றலும், இசைப் பயிற்சியும் அவசியமாக இருக்கவேண்டிய தகுதி களாகும். இன்று அமெரிக்க நாட்டில் நூலகத்துறையில் ஈடுபட்டிருப்போரில் பாதிக்குமேல் இப்பிரிவைச் சார்ந்தோ ராகவே உள்ளனர். பெண்களே பெருபான்மையினராக உள்ளனர்.

  • குழந்தைகள் நாட்டின் அரிய செல்வங்கள்; நாட்டின் எதிர்காலம் அவர்கள் கையில் தான் உள்ளது. ’’ என்பதை நன்குணர்ந்த அமெரிக்க நாட்டு மக்கள் பொது நூலகங்களின் துணையால் அக்குழந்தை களது அறிவினைப் பெருக்கிக்கொள் வதற்குரிய வாய்ப்புகளை வழங்குகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு வளமான எதிர் காலம் வாய்க்கின்றது. தங்களைப் பற்றியும், தங்கள் நாட்டைப்பற்றியும், உலகத்தைப்பற்றியும் நன்கு இளமையிலேயே அறிந்துகொள்கின்ற அமெரிக்கக் குழந்தைகள் பரந்த அறிவையும், உழைக்கின்ற ஆற்றலையும், நாட்டின் நலத்திற்காக எதனையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற தியாக உணர்வினையும் பெற்று, உலக அரங்கில் அமெரிக்க நாடு முதலிடத்தை என்றும் பெற்று, திaலத்த புகழோடு விளங்கவேண்டும் என்பதற்காக பல ஆக்கப்பணிகளையும், அருஞ்செயல்களையும் ஆற்றுகின்றனர்.

நம் தாயகத்தில் இன்று குழந்தை நூலகங்கள் திறக்கப் படுவது மகிழ்ச்சிக்குரியதாகும். ஆனல் இந்திய மொழிகளில் தரமான குழந்தை நூல்கள் அதிக அளவு, ஏன், போதிய அளவு இல்லை என்பது வருந்து தற்குரியதாகும். குழந்தை இலக்கியங்களைப் படைப்பதில். ஆசிரியர்களும், அரசினரும், வெளியீட்டாளர்களும் சிறந்த அக்கறைகாட்டவேண்டும். 57