பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سے! 5. கல்லூரி நூலகம் கல்லூரி நூலகம் என்பது கல்லூரி நிருவாகத்தினரால், கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள்,பயிலும் மாணவர்கள் ஆகியோரது உபயோகத்திற்காக நடத்தப் பெறுகின்ற நூலக மாகும். கல்விக் களஞ்சியமாக விளங்கும் கல்லூரி நூலகம் கவினுற இலங்க வேண்டுமெனின், கல்லூரி ஆட்சியாளர்கள் பின்வரும் பொருட்கள் மீது தங்கள் கருத்தைச் செலுத்த வேண்டும். காரணம், அவைகள் நூலகம் என்னும் அழகிய மண்டபத்தைத் தாங்கும் அடிப்படைத் துண்களாக விளங்குவன என்பதாகும். அம்முக்கியப் பொருட்கள் பின்வருவனவாகும்; 1. நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், அரியதும், தரமானது மான எல்லாப் பொருள்களைப் பற்றிய நூல்களால் ஆன நூல்தொகுதி. 2. அரிதின் முயன்று சேகரித்து நூல்தொகுதியினைக் கட்டிக் காத்து அதனைப் பயனுள்ள ஒன்ருக ஆக்குவதற்கு அரும்பாடு படும் ஆற்றலுடைய நூலக அலுவலர் குழாம். 3. நூலகத்தைத் திறம்பட நடத்துவதற்கும், அ த ன து பணிகளை நாளடைவில் விரிவு படுத்துவதற்கும், அப்பணிகளே தரமுள்ளவையாக விளங்கச் செய்வதற்கும் தேவைப்படும் போதிய நிதி வசதி. 4. அனைவரும் வந்து தாங்கள் விரும்பியவற்றை விரும்பிய வண்ணம் எடுத்துப் படித்து மகிழ்வதற்கு ஏற்றவாறு எல்லா வசதிகளும் அமைந்த எழில் பெறு கட்டிடம். 62