பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நூல் தொகுதி நமது உடலுக்குச் சிரசே பிரதானம். அது போன்று ஒரு நூலகத்தின் தலைசிறந்த உதுப்பு அதனது நூல்தொகுதியே ஆகும். நூல்தொகுதி நூலகக்தின் உயிர்நாடி ஏன் உயிர்த் துடிப்பு என்று கூறினும் அது மிகையாகாது. சுருங்கக்கூறின், கல்லூரி நூலகத்தின் நூல்தொகுதி உயிரோட்டம் உடைய தாகவும், என்றும் வளரக்கூடிய இயல்புடையதாகவும் விளங்க வேண்டும். நூல்களாயினும் சரி, பருவ வெளியீட்டு இதழ்க ளாயினும் சரி, அரிய கருத்துக்கள் அடங்கிய பழை யனவும் புதுமைக் கருத்துக்கள் அடங்கிய புதியனவும் நூலகத்தில் அவசியம் இருத்தல் வேண்டும். மாணவர்கள் டா-த்திட்டத் தில் குறிக்கப்பட்டுள்ளபடி தங்களது படிப்பை கேற் கொள்வ தற்கும், அத்துடன் அவர்கள் கல்வி அறிகில் தன்னிறைவு பெற்றவர்களாக விளங்கி, பரந்த நுண்ணிய அறிவினைப் பெற்று, அதன் துணையால் ஆய்வுகள் பலவற்றை நடத்துவ தற்கும் பெருந்துணை புரிகின்ற நூல்கள் அனேத்தையும் ஒரு கல்லூரி நூலகம்சேகரித்துவைக்க வேண்டும். அதுவே அதனது தலையாய பணியாகும். மேற்கூறிய அருஞ்செல்வங்களோடு அரிய நூல்தொகுதியும், சிறப்பு நூல்தொகுதியும், பாட நூல் தொகுதியும்அங்கு இடம்பெறுதல் வேண்டும்.சிறிதுவிரிவாகக் கூறின், கல்லூரி நூலகம் பின்வரும் அறிவுச் செல்வங்களேன் தன்னகத்தே கொண்டதாக இலங்க வேண்டும். 1. Glung glü6) 2-8564 GT6ds ESüd (General Reference Sources) பொருள் அல்லது சிறப்பு ஆய்வு உதவு நூல்களும் (Special or Subject Reference Sources). Qtur & e?,tùô] I5ITóò sai* gr«a lugur வற்றுள், கலைக் களஞ்சியங்கள், அகராதிகள், நூல் விவரத் தொகுதிகள், வாழ்க்கை வரலாற்று மூலங்கள், நில இயல் செய்தி மூலங்கள், ஆண்டுத் தகவல் வெளியீடுகள், கையேடு கள், வழிவிபரங்கள், ஊர்ப்பெயர்கள், நிறுவனங்களின் பெயர் கள், அவற்றின் ஆட்சியாளர்கள், அவர்களின் முகவரிகள் முதலியவற்றைத் தரும் நூல்கள், புள்ளி விவர அல்லது பல் பொருள் தகவல் ஏடுகள், சொற்-பொருள் அகரவரிசை அட் டவணைகள் முதலியன அடங்கப் பெறும். பொதுஆய்வு உதவு 63