பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்களோடு எல்லாப் பொருள்கள் பற்றிய சிறப்பு ஆய்வு உதவு நூல்களையும் ஒரு கல்லூரி நூலகம் வாங்கி வைக்க வேண்டும். இவையனைத்தும் ஆசிரியர்களுக்கும் மானவர்க ளுக்கும் பெரிதும் பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.சிறப்பு ஆய்வுஉதவு நூல்கள் அகராதி,கலைக்களஞ்சியம், நூல் விவரத் தொகுதி முதலிய வடிவங்களிலும் காணப்படும் என்பது நாம் அறிந்ததொன்றே. 2. பாடத் திட்டக் குழுவினரால் பரிந்துரை செய்யப் பட்ட பாடநூல்களும், மாணவர்களும் ஆசிரியர்களும் மேலும் தங்களுக்குரிய கல்விப் பொருள்கள், ஆய்வுப் பொருள்கள் ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்து, தாங்கள் ஏற்கெனவே அப்பொருள்களில் பெற்றிருக்கின்ற அறிவுத்திறனை ஆழப் படுத்துவதற்கும் அகலப்படுத்துவதற்கும் உறுதுணையாகவினங் கும் அப்பொருள்களேப் பற்றிய ஏனைய தரமான, உயர்ந்த பொது-சிறப்பு நூல்களும், கல்லூரி நூலகத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய நூல்களாகும். பாட நூல்களனைத்தும் கல்லு ரியின் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாகவே வாங்கி வைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறு செய்யின், ஆசிரி யர்கள் எவ்விதச் சிரமமும் இன்றி அந்நூல்களை உரிய நேரத் தில் பெற்று, தடையேதுமின்றி வகுப்புக்களை நடத்தி, ஆண்டு இறுதித் தேர்விற்கு முன்னர், அதுவும் சரியான நேரத்தில் பாடங்களே முடிக்க இயலும். கல்வியாண்டு தொடங்கிய பின்னர், அல்லது முதல் பருவ இறுதியிலோ அன்றி அதன் பின்னரோ பாட நூல்களே வாங்கலாம் என்று எண்ணுவது தவருண கொள்கையாகும். அத்துடன் உரிய காலத்தில் வாங் கப்பட்ட பாடநூல்களே, தாமதம் ஏதுமின்றி பயனக்கச் சடங்குகளே எல்லாம் செய்து, ஆசிரியர்கள், மாணவர்கள் கரங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும். பாட அறிவினைப் பெருக்கிக் கொள்வதற்குத் துணை செய்கின்ற ஏனைய நூல்களை யும், அவ்வாறே ஆசிரியர்கள், மாணவர்கள் செய்கின்ற ஆய்விற்குத் துணைபுரிகின்ற நூல்களையும் உரிய காலத்தில் வாங்குவதற்குரிய முயற்சியினை எடுத்துக் கொள்ள வேண்டும். 3. மாணவர்கள் தங்கள் பொதுஅறிவை வளர்த்துக் கொள் வதற்கு வழி செய்யும் பலதுறைகளைப் பற்றிய நூல்கள். 64