பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அனைவரும் விரும்பிப் படிக்கும் பல்பொருள் நூல்களும் பொழுதுபோக்கு நூல்களும், பொழுதுபோக்கு நூல்களில் , முக்கியமானவை கதை நூல்களாகும். கதை நூல்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாணவர்களே மாண் புடையவர்களாக, பண்புடையவர்களாக ஆக்குவதற்கு ஆற்றல் வாய்ந்த கதை நூல்களைக் கல்லூரி நூலகம் வாங்கி வைப்பின், அது நாட்டிற்குச் செய்கின்ற நற்பணியாகும். 5. பருவ வெளியீட்டு இதழ்களும், செய்தி இதழ்களும், மாணவர்களின் கல்விப் பொருள் அறிவையும், மொழித் திறனையும், அத்துடன் பொது அறிவையும் வளர்ப்பதற்குத் துணைசெய்கின்ற தரமான இதழ்களைத்தான் கல்லூரி நூலகம் வாங்கி வைக்க வேண்டும். 6. அரசாங்க வெளியீடுகள். மாநில அரசு, மத்திய அரசு, அவ்வப்பொழுது வெளியிடுகின்ற அறிக்கைகள், சுவடிகள், கையேடுகள், நூல்கள் ஆகியவற்றைக் கல்லூரி நூலகம் வாங்கி வைப்பின், அவை ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன்படும். அவ்வாறே வெளி நாட்டு அரசாங்கங்கள் வெளி யிடும் நூல்களையும் நாம் சேகரித்து வைக்கலாம். 7. கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களால், அவ்வப்பொழுது வெளியிடப் பெறும் சிறப்பு மலர்கள், அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியனவும் கல்லூரி நூலக நூல்தொகுதியில் இடம் பெற வேண்டும். 8. துண்டு வெளியீடுகளும், பத்திரிகைத் துணுக்குகளும். 9. படங்கள், இயங்கு படக் காட்சிப்படச் சுருள்கள், திரைப் படச் சுருள்கள், காட்சி வில்லைகள் (Sides), ஒலிப்பதிவுத்தட்டு கள், ஒலிப் பதிவுக் கம்பிகள், ஒலிப் பதிவு நாடாக்கள், இசைப் பதிவுத்தட்டுகள், உலகம், வான், கோளகை ஆகியவற்றின் வடிவப் பொருள் போன்ற செவிக்கட் புலச் சாதனங்கள் 65