பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அரிய ஒலைச் சுவடிகளும் பிற கையெழுத்துச் சுவடிகளும். மேற்கூறிய அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் முறை யாகத் தேர்ந்தெடுத்து, கால தாமதமின்றி வாங்கி வைக்க வேண்டு:ம். நூல்களைத் தேர்ந்தெடுக்குங்கால் மான வர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது கருத்துக்களுக்கு மதிப்புத் தருதல் வேண்டும். அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் கல்லூரி நூலகம் சேகரித்து வைத்தால் மாத்திரம் போதாது. அவற்றை அது நன்கு பாது காக்க வேண்டும். அத்துடன் அவற்றை அனை வரும் நன்கு பயன் படுத்தும் படி செய்ய வேண்டும். நூல் களைப் பொருள் வாரியாகப் பிரித்து, அவற்றிற்கு வகைப் படுத்திய எண்களை (Call Number) வழங்கி, பின்னர் திறந்த நூல் நிலையடுக்குகளில், வகைப் படுத்திய எண்கள் வாரியாக அவற்றை அடுக்கி வைக்க வேண்டும். அத்துடன் பச்சைப் பயிர்களிடையே காணும் களைகளை நாம் களைந்து எறிதல் போல சிதைந்து ஒன்றிற்கும் உதவாத நிலையில் விளங்கும் பழைய நூல்களே நூலகக் கருவூலத்திலிருந்து (Stock Room) அவ்வப்பொழுது நீக்கி விடுதல் வேண்டும். கல்லூரி நூலகத் தின் கருவூலத்திலே காணப் பெறுகின்ற அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் அனைவரும் சம உரிமையோடு நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சில விதி முறை களை நாம் வகுக்க வேண்டியவர்களாக இருக்கின்ருேம், அவ் விதிகள், வீட்டிற்கு எடுத்துச்சென்று படிப்பதற்குரியநூல்கள், அனைவரது உபயோகத்திற்காக நூலகத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டிய நூல்கள், பருவ வெளியீடுகள், வீட்டிற்கு எடுத்துச் செல்லுகின்றவற்றைப் பயன் படுத்துவது பற்றிய கால வரையறை, குறித்த காலத்தில் நூல்களைத் திருப்பித் தராதவர்கள் செலுத்த வேண்டிய அபராதம், நூலகத்தில் காணப் பெறும் வாய்ப்பு நலங்களைப் பயன் படுத்தும் வழி வகைகள், நூலக அலுவல் தேரம், நூலகத்தின் விடுமுறை தாட்கள், நூலகத்தைப் பயன்படுத்துகின்றவர்கள் நூலகதி 66