பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவெழாமல் மனம் புழுங்கினர். கல்விக்கூடத்து ஆசிரியரின் தொடர்பு இல்லாமல் இப்படி ஒரு நூலக உணர்வு நாட்டில் பெருகுவதை துரோனரீயத்தால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. ஏகலைவனது கட்டைவிரலை ஈயென இரந்து கேட்டுப் பெற்றுக் கொண்டுவிட்டார். விரல் இழந்த ஏகலைவன் உண்மையில் விறல் இழந்து, எதிர்காலம் இழந்து, ஆதிபர்வத் திற்கு அப்புறம் முகவரியும் தெரியாமல் போய்விட்டான். நூலகத் துறையில் வல்லுநராகத் திகழும் திரு. திருமலை முத்துசுவாமியின் இவ்வருமை நூல் பள்ளித் துரோணர் களால் விடுபட்ட மாணவர்களாகி (Props Out) முகவரி இழந்து மறையும் இந்நாள் ஏகலைவர்களுக்கு உயரிய முறை யில் வழிகாட்டும் உயர்ந்ததொரு நூலாக உள்ளது. நூல கவியல் சிந்தனைகள்” வீட்டுக்கொரு நூலகத்தை உருவாக்குவ தில் பெருந்துணை செய்யும். அதே நேரத்தில் பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் மாணவன் தேர்ந்த பாடத்திலேயே மீண்டும் தேர்வெழுதித் தோற்றுப் போய் படிப்பிற்கே தலை முழுகிவிட வாய்ப்பு அளித்து வரும் இந்நாளைய தேர்வு முறை ஒழிய வேண்டும் என்றும் நாம் விரும்புகிருேம். ஆம், பாடப் புத்தகமல்லாத பொது நூற்களைத் தம் பிள்ளைகள் படிப்பதை இன்று பெற்றேர்களும் ஊக்குவதில்லை: பேராசிரியர் திரு. திருமலைமுத்துசுவாமி அவர்கள் முதலில் ஆய்வுதவும் நூலகரிடம் நம்மை அருமையாக நெறிப்படுத்துகின்ருர். அவர் நமக்கு ஆற்றவேண்டிய கடமைகளே இனிது விளக்குகிருர். அடுத்து ஆராய்ச்சிக் கண் கொண்டு பாரதியாரைப் பார்க்கச் செய்கின்ருர். அவர் பற்றிய ஆராய்ச்சிக்குத் துணை செய்யும் நூற்களையெல்லாம் நூலகவியலினையொட்டி இனிய வகையில் வரிசைப்படுத்தித் தந்துள்ளார். உரோமாபுரிப் பழம்பெரும் நூலகங்களின் பகைவர்களால் அழிக்கப்பட்ட பேபிரஸ் சுருள்கள் நம் தமிழகத்தில் கடல்கொண்டு அழிந்து போன எண்ணற்ற பனையோலைச் சுவடிகள் பற்றி நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. ஒரே ஒரு ஊரிலே’ என்ற பசுமையான தலைப்பு நம்மை V