பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கில் நடந்து கொள்ள வேண்டிய பாங்கு ஆகியன. பற்றித் தெளிவாகக் கூறவேண்டும். ஆனல் நூலகர் நூலக விதிகளை எங்கெல்லாம் தளர்த்த முடியுமோ அங்கெல்லாம் தளர்த்தி வாசகர்களுக்கு உதவ வேண்டும். நூலகத்திலுள்ள அறிவுச் செல்வங்கள் அனைத்தும் பிறருக்குப் பயன்படவே உள்ளன என்பதை அவர் என்றுமே மறக்கக் கூடாது. உயர் கல்விக்காக நாம் செலவழிக்கின்ற பணத்தில், ஒரு கணிசமான தொகையினைக் கல்லூரி நூலக வளர்ச்சிக்காக ஒதுக்கவேண்டும். சில கல்லூரி ஆட்சியாளர்கள், கல்லூரி களைத் தொடங்குகின்றகால், கல்லூரி நூலகங்களுக்காக நூல் கள் வாங்குவதில் அக்கறை காட்டுவார்கள். அதன் பின்னர் அவர்கள் வாளா இருப்பார்கள். இது முற்றிலும் தவமூன தாகும். கல்லூரி நூலகத்தினைத் தொடங்குகின்ற பொழுது எவ்வாறு பல பொருள்கள் பற்றிய நூல்களை வாங்குகின்ருர் களோ, அவ்வாறே ஆண்டு தோறும், ஏன் மாதந்தோறும் பல புதிய நூல்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கவேண்டும்: அது அவர்களது தலையாய கடமைகளில் ஒன்ருகும். மான வர்கள் தருகின்ற நூலகக் கட்டணம், அரசுதருகின்ற உதவித் தொகை, சிறப்பு உதவித்தொகை, ஆட்சியாளர்கள் வழங்கு கின்ற நிதி ஆகியவற்றில் குறைந்தது 50 விழுக்காட்டினை நூல்கள் வாங்குவதற்கே செலவழிக்க வேண்டும். 2. நூலக அலுவலர் குழாம் அறிவாலயமாக விளங்கும் நூலகம் சீரும் சிறப்புமாக விளங்குவதற்குரிய வழிவகைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியவர்கள் நூலக அலுவலர்களே ஆவார்கள். எனனே! பொதுக் கல்வி அறிவு, நூலகவியற் கல்வி அறிவு, நூலகத் துறையில் பயிற்சி, அநுபவம் ஆகியவற்றை உடையவர்களே கல்லூரி நூலகத்தை கிருவகிப்பதற்குத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். மேலும் அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களுக்கு அறிவுத் துறையில் ஏற்படும் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றைத் தீர்த்து வைப்பதற்கும் 67