பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிய ஆற்றலும் கொண்டு விளங்க வேண்டும். சுருங்கக் கூறின், அவர்களுக்கு கிறைந்த கல்வி அறிவும், தொழில் துணுக்கங்களைப் பற்றிய தெளிந்த கல்வி அறிவும் இருக்க வேண்டும். ஆல்ை இதற்கு நேர்மாருக, “யாரையாவது வைத் துக் கொண்டு எப்படியாவது நூலகத்தை நடத்தி விடலாம்’ என்று இன்று கூட க் கல்வித் துறையைச் சார்ந்த ஒரு சிலர் எண்ணிக்கொண்டிருப்பது மிகவும் வருந்துவதற்கு உரியதா கும். இந்கிலே மாறவேண்டும். இல்லையேல் நாம் அதனை மாற்றி அமைக்கவேண்டும். ஆனல் இன்றைய நமது அரசு அரசினர் நடத்தும் கல்லூரிகளில் எல்லாம் தகுதி பெற்ருேரையே நூலகர்களாக நியமித்து வருவது வரவேற்றற் குரியதாகும் நமது தமிழகப் பல்கலைக் கழகங்களும் இதற்கு ஆதரவு தருவதும் குறிப்பிடத் தக்கதாகும். ஒவ்வொரு கல்லூரி நூலகமும், குறைந்தது பொதுக் கல்வி, நூலகவியற் கல்வி ஆகிய இரண்டிலும் இளங்கலைப் பட்டம் பெற்ற ஒருவரது மேற்பார்வையில் தான் விளங்க வேண்டும். அவருக்கு விரிவுரையாளருக்குரிய ஊதியமும் பிற சலுகைகளும் வழங்கப் பெறுதல் வேண்டும். இன்று பெயர ளவில்தான் அவர்கள் விரிவுரையாளர்களுக்கு ஒப்ப விளங்கு கின்றனர் என்று கூறின் அது தவருகாது. பல்கலைக் கழக மானியக் குழுவும், தமிழகப் பல்கலைக் கழகங்களின் ஆட்சிக் குழுக்களும், நூலகருக்கு விரிவுரையாளருக்குரிய ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தும் கூட, இன்று நூலகர்கள் விரிவுரையாளர்களே விடக் குறைந்த ஊதியமே பெறுகின்றனர் என்பது நாம் அறிந்த தே. எனவே இன்றைய நமது அரசாங்கம் உடனடியாக இதனைப் பரிசீலனை செய்து ஆவன செய்ய வேண்டும் என்று இங்கு நாம் வேண் டிக் கொள்வதில் தவருென்றுமில்லை. விரிவுரையாளராகப் பணியாற்றுகின்ற ஒருவருக்கு இணைப் பேராசிரியராகவும். பேராசிரியராகவும், ஏன் கல்லூரி முதல்வராகவும் ஆவதற்கு இவ் வாய்ப்பு நூலகருக்கு இல்லை என்பதை மனதிற்கொண்டு வாய்ப்புண்டு. நாம் நன்கு அறிவோம். எனவே இதனை 68