பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலகருக்கென ஒரு தனிப்பட்ட சம்பளத்திட்டத்தை வகுக்கவேண்டும். குறைந்தது அவர்களுக்கு ரூ 475-25-65030-800 என்ற சம்பளத்திட்டத்தை வகுக்கலாம். ஒரு கல்லூரி முதல் நிலைக் கல்லூரியாக இருந்து, அக்கல்லூரியின் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்திற்குமேல் இருக்குமெனின், அக்கல்லூரி நூலகருக்கு ரூ 575-25-650-40-850 என்ற சம்பளத் திட் டத்தை ஏற்படுத்தலாம். ஆல்ை இதனைப் பெறுவதற்ரு ஒரு வருக்குத் குறைத்தது மூன்று ஆண்டுகள் அநுபவம் இருக்க வேண்டும். அல்லது அவர் பொதுக் கல்வியில் அல்லது நூலக வியற் கல்வியில் முதுகலைப்பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். முதுகலை வகிப்புக்களை உடைய முதல் நிலைக் கல் லூரியில் பணியாற்றுகின்ற நூலகருக்குரூ. 600-40-1000 என்ற சம்பளத்திட்டத்தை ஏற்படுத்தலாம். ஆனல் அதற்கு, பொதுக்கல்வியிலும், நூலகவியற் கல்வியிலும் முதுகலைப் பட் டம் பெற்றவரையே நியமிக்க வேண்டும். ஏற்கெனவே பணி யாற்றுகின்ற நூலகர்கள் படித்து இக்ககுதியினைப் பெறுவ தற்கு, பல்கலைக்கழகமும், கல்லூரி ஆட்சியாளர்களும் ஆக்க மும் ஊக்கமும் அளித்தல் வேண்டும். ஆசிரியர்களைப் போன்று நூலகர்களும் மூன்ருண்டுகள் பணியாற்றிய பின் னர், தனியாகப் படித்து முதுகலைப் பட்டத் தேர்வினை எழுது வதற்கு வாய்ப்பினே வழங்கியுள்ள தமிழகப் பல்கலைக் கழகங் களை நாம் அவசியம் பாராட்டாமல் இருக்க முடியாது. நூல கத்துறையில் உள்ள அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன் படுத்தி தங்களது கல்வித்தகுதியினை வளர்த்துக் கொள்ள வேண்டும். நூலகத்துறையில் இருக்கின்ற ஒரு சிலர் இத் தகைய வாய்ப்பினைப் பயன்படுத்தி, நூலகத்துறையில் உயர் பதவிகளைப் பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். தகுதி பெற்ற நூலகருக்கு போதிய ஊதியமும் பிற சலு கைகளும் வழங்குவதோடு கல்லூரி நூலகத்தின் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் அவரிடமே ஒப்படைத்து விடவேண் டு ம். பிற பொருட் துறைத் தலைவர்களைப் போன்று நூலக ரும் ஒரு துறையின் தலைவராகக் கருதப்படவேண்டும். மtருக 69