பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரை ஒரு பேராசிரியரின் கீழ்ப்பணியாற்றச் சொல்வது நமது பிற்போக்கு நிலையினேயே காட்டும். அத்துடன் நூல கர். கல்லூரி ஆசிரியர் சங்க உறுப்பினராகவும், கல்லூரி ஆலோசனைக் குழுவின் (College Council) உறுப்பினராகவும் பணியாற்ற வேண்டும். அவருக்கு ஆலோசனை கூறுவதற்கு நூலக ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் தலைமைப் பேராசிரியர்கள் அனைவரும் இடம் பெறவேண்டும். கல்லூரி முதல்வர் அக்குழுவின் தலைவராக வும், நூலகர் செயலாளராகவும் பணியாற்றவேண்டும். தகுதி பெற்ற தலைமை நூலகர் நூலகத்தின் அமைப் பியல், ஆட்சியியல் ஆகிய இரண்டினையும் பொதுவாகக் கவ னித்துக் கொள்வார். அவருக்குத் துணையாக ஓரிரு ஆய்வு உதவு நூலகர்களும் (Reference Librarians), உதவியாளர்க ளும், எழுத்தாளர்களும் (Clerks), சில பணியாட்களும் நூல கத்தில் பணியாற்றவேண்டும். இரண்டாம் நிலைக் கல்லூரி நூலகத்தில் குறைந்தது ஒரு நூலகர், ஒரு எழுத்தர், ஒரு பணி யாள் ஆகியோர் பணியாற்ற வேண்டும். முதல் நிலைக்கல்லூ ரியைச் சேர்ந்த நூலகமாயின் மேற்கொண்டு ஒரு எழுத்தரும், ஒரு பணியாளும், அத்துடன் ஒர் உதவியாளரும் தேவைப் படும். முதுகலை வகுப்புக்களை உடைய முதல்நிலைக் கல்லூரி நூலகமாயின், மேற்கொண்டு இரண்டு ஆய்வு உதவு நூலகர் கள் அவசியம் பணியாற்ற வேண்டும். எழுத்தருக்குத் தட்டெழுத்துப் பயிற்சியும், சுருக்கெழுத்துப் பயிற்சியும் அவசியம் இருக்க வேண்டும்; ஆய்வுஉதவு நூலகர்களும். தொழில் நுணுக்கப் பகுதியில் பணியாற்றும் உதவியாளர் களும், சிறந்த கல்வி அறிவும், தொழிற் பயிற்சியும் பெற்றவர்களாக இருக்க வே ண் டு ம். இவர்களுடன் மாணவர்களில் ஒரு சிலர் பகுதி நேர உதவியாளர்களாகப் பணியாற்றுவதற்குரிய வாய்ப்பினை நூலகர் அவர்களுக்கு வழங்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாகக் கல்லூரி யில் பணியாற்றும் எல்லா ஆசிரியர்களது நல்லெண்ணம், கூட்டுறவு, உதவி ஆகியவற்றை நூலகர் பெறின், கல்லூரி 70