பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலகம் சிறக்கப் பணியாற்றும் என்பது வெள்ளிடை மலையாகும். 3. கிதி நிலைமை நூலகத்தின் நிதிநிலைமை சரியாக இருந்தால்தான், அதாவது போதிய நிதிநிலைமை இருந்தால்தான், முன்னர்க் குறிப்பிட்டபடி நூலகத்தினது நூல் தொகுதி உயிரோட்டம் உடையதாகவும், என்றும் வளரும் இயல்பினதாகவும்விளங்க முடியும் என்பதை நாம் நன்கு அறிவோம். மேலும் நூலக மானது ஆற்றல் மிக்க அலுவலர்களைப் பெறுவதோடு, தனது னிகளையும் விரிவு படுத்த இயலும். கல்லூரி நூலகமானது எப்பொழுதும் வளரும் தன்மையது என்பதை நாம் என்றும் மறக்கக் கூடாது. புதிய வகுப்புக்களைத் தொடங்குகின்ற போதும், பாடத்திட்டங்கள் மாறுகின்ற போதும், புதிய பொருள்கள் சொல்லித் தரப்படுகின்றபோதும், புதிய ஆசிரி பர்கள் கல்லூரிக்கு வருகின்ற போதும் நூலகம் ஒரளவு வள ரும் என்பதை எவரும் மறுக்க இயலாது. இத்தகைய வளர்ச் சிக்குத் தடை ஏற்படாத நிலையில் நூலகத்தின் பொரு ளாதார நிலை இருக்கவேண்டும். மாணவர்கள் தருகின்ற நூல கக் கட்டணம், அவர்கள் செலுத்துகின்ற அபராதத்தொகை அரசு அளிக்கின்ற உதவித்தொகை, சிறப்பு உதவித் தொகை, கல்லூரி ஆட்சியாளர்கள் அளிக்கும் நிதி ஆகியவற்ருேடு, பழைய மாணவர்கள், அவர்களது பெற்ருேர்கள், புதிய மாணவர்கள், அவர்களது பெற்ருேர்கள், வள்ளல்கள் ஆகி யோரிடமிருந்து நன்கொடைகளைப் பெறுவதற்கு நாம் முயல லாம். அதில் தவருென்றுமில்லை. கல்லூரி ஆசிரியர்களும் தங்களால் முடிந்த அளவு உதவலாம். நூல்கள், பருவ வெளி பீட்டு இதழ்கள் ஆகியவற்றையும் கல்லூரி நூலகம் தன் கொடையாகப் பெறலாம். மேலும் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது பிறந்த நாள் பரிசாக ஒரிரு நூல்களை வாங்கி நூலகத்திற்கு அளிக்கலாம். அவ்வாறே தங்களது பெற்ருேர்களையும் நூற்கொடைகளையும் நன் 71