பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறந்த நூலக அமைப்பு முறையினை (Open Access System) மேற்கொள்ளலாம். கல்லூரி நூலகக் கட்டிடங்களேக் கட்டுவதற்கு நிதி உதவி செய்வதில் மாநில அரசும், மத்திய அரசும் தாராளமாக இருக்க வேண்டும். பொது மக்களும் பொருளுதவி செய்ய லாம். பொறியியல் வல்லுநர், நூலகர் ஆகிய இருவரையும் கலந்தே நூலகக் கட்டிடம் கட்டப்படவேண்டும். அத்துடன் பல்கலைக் கழகத்தின் ஆலோசனையையும் அறிவுரையையும் கல்லூரி ஆட்சியாளர்கள் இது குறித்துப் பெற்றுக் கொள்ளு தல் சாலச் சிறந்ததாகும். ஆற்றுப்படுத்தல் ஆண்டுதோறும் கல்லூரிக்குப் புதிதாக வரும் மாணவர் களை அக்கல்லூரிக்கு நூலகத்தினிடத்து ஆற்றுப்படுத்துகின்ற நிகழ்ச்சியினை (Orientation Prograாme) ஆண்டுத் தொடக் கத்தில் ஏற்பாடு செய்யவேண்டியது நூலகர் தம் முதற் கடமை ஆகும். அவர் அவர்களை மலர்ந்த முகத்துடன் வர வேற்று, அவர்களோடு இனிமையாக உறவாடி, உரையாடி, இறுதியில் அவர்களே நூலகத்தின் முக்கிய பகுதிகளுக்கு அழைத்துச்சென்று காட்டி, நூலகத்தின் பயன், அதன் அமைப்பு, அது ஆற்றும் பொதுப்பணிகள், சிறப்புப் பணி கள், அதனைப் பயன்படுத்துகின்ற முறை, நூலகத்திலே காணும் அறிவுச் செல்வங்கள், அவற்றின் அருமை பெருமை கள், நூல்கள் பொருள்வாரியாக வகைப்படுத் தப்பட்டு, வகைப்படுத்திய எண்களுக்கேற்ப (குறியீடுகளுக்கேற்ப) அடுக்கி வைக்கப்பட்டிருப்பின் நூலகம் பின்பற்றுகின்ற வகைப்படுத்தும் முறை, நூலக நூற்பட்டி. நூல்கள் நீ க லாக ஏனைய அறிவுச் செல்வங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக் கின்ற முறை, நூலக விதிகள் ஆகியன பற்றி எடுத்துக் கூறவும் வேண்டும். நூலகக் கையேடு, நூலகத்தின் வரைபடம் ஆகியன இருப்பின், நூலகர் அவற்றை அவர்களுக்கு வழங்க வேண்டும். நூலகத்தைப்பற்றி மாணவர்கள் நன்கு அறிந்து 73'