பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ள கூடிய வகையில், நூலகக் கையேடு நூலகத்தைப் பற்றிய முக்கிய செய்திகளையும் நூலக விதிகளையும் கொண் டி ருக்கவேண்டும். இவ்வாறே நூலக நூற்பட்டியினையும் நூலகர் அச்சிட்டு அனைவர்க்கும் வழங்கலாம். நூலகம் ஆற்றும் இப்பணிகளால், மாணவர்கள் நூலகத்தைப்பற்றி நன்கு அறிவதோடு எவ்விதக் சிரமமும் இன்றி நூலகத்தை நன்கு பயன்படுத்தி நல்ல பயன்களையும் பெறுகின்றனர். நாளடைவில் அவர்கள் நூலக உணர்வுடையவர்களாக விளங்குவதோடு நூலகக் கருவூலத்திலே பு ைத த் து கிடைக்கும் விலைமதிப்பற்ற செல்வங்கள் அனைத்தையும் அகழ்ந்தெடுத்து, ஆராய்ந்து. அகமகிழ்த்து, ஆழ்ந்து அகன்ற அறிவினைப் பெற்று, கல்வியிற் சிறந்தவர் களாக, கலைபயில் அறிவும் கட்டுரை வன்மையும் உடையவர் களாக, பண்பில் உயர்ந்தவர்களாக, ஆராய்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் உடையவர்களாக, தாங்கள் பெற்ற அறிவுத் திறத்தால் நாட்டிற்குப் பல ஆக்கப் பணிகளைச் செய்யும் அருந்திறன் உடையவர்களாக விளங்குவர் அன்ருே ! _ _ 74