பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் மு. வரதராசனர் தமிழ்ப் பண்பாட்டை, தமிழர்தம் நாகரிகத்தை, தமிழ் இலக்கியத்தின் இனிமையை, தமிழ் மொழியின் வளத்தை, தமிழ்ப் புலவர்கள் வாரி வழங்கிய வாழ்வியற் கருத்துக்களைத் தமது எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எடுத்துக் கூறி அவர்களேத் தமிழ் உணர்வுடையவர்களாக விளங்கச் செய்த தமிழ்ச் சான்ருேர்களில் ஒருவரே டாக்டர் மு. வ. ஆவார்கள். அவர்கள் வட ஆற்காடு மாவட்டத்தி லுள்ள திருப்பத்தாரைச் சேர்ந்தவர்கள். அவர்களது தந்தை பார் பெயர் முனுசாமி. தாயார் பெயர் அம்மாக்கண்ணு அம்மாள். பிறந்த தேதி 3-4-1912 ஆகும். உயர்நிலைப் பள் விப் படிப்பை முடித்து அரசாங்க அலுவலகத்தில் பணியாற் றிய இப்பெரியார் தமது சொந்த முயற்சியால் தமிழ் இலக் இயங்கள் அனைத்தையும் ஐயந்திரிபறக் கற்று, தமிழறிவைப் பெற்று, வித்துவான், பி.ஓ.எல். ஆகிய பட்டங்களைப் பெற்று தமிழாசிரியராகப் பணியாற்றி, அதன் பின்னர் ஆராய்ச்சி வில் ஈடுபட்டு, எம். ஒ. எல். டாக்டர் ஆகிய பட்டங்களைப் பெற்ருர். பைந்தமிழைப் பரப்பும் பச்சையப்பன் கல்லூரி யில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த் துறைத் தலைவ ராகவும் பணியாற்றிய அவர்கள்: செந்தமிழ் வளர்க்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி இன்று சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் விளங்கும் மதுரைப் பல் 75