பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் குழந்தையுலகத்திற்கே அழைத்துச் சென்று விடு கிறது. கல்லூரி நூலகம்’ எவ்வாறு இலக்கண முறைமை யில் இருத்தல் வேண்டும் என்று காணும் அதே நேரத்தில் எழுதித் தேர்ந்த பாடத்திலேயே மீண்டும் தேர்வு எழுதித் தோற்கும் ஒரு நிலையை உருவாக்கி வைத்துள்ள இன்றையப் பல்கலைக்கழகத் தேர்வு முறை மாணவர்களை நூலகத்தில் காணமுடியாது செய்து கொண்டிருக்கிறது என்பதையும் உணர்கின்ருேம். மறுமலர்ச்சி என்ற பெயரில் கதையாசிரியர்கள் தலைத் தீபாவளிக்கு வரும் மாப்பிள்ளைகளையும் அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் மாமனர்களையும் பற்றியே எழுதிக் கொண்டிருந்த நிலையை மாற்றி, செந்தாமரை, கள்ளோ காவியமோ, அகல் விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம் ஆகிய புதினங்கள் மலர்வதற்குக் கார ணமாக இருந்த தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் மு. வரதராசனரும், அவர்தம் நூல் விவரத் தொகுதியும், மணிமொழிகளும் இளைஞர்களின் சிந்தனைக்கு என்றுமே நல்ல விருந்தாம். பள்ளியில் செவிக்குணவு இல்லாத நண்பகல் நேரத்தில் சிறுவர்களின் வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்ற ஒரு நல்ல நிலையை "மதிய உணவுத் திட்டம்’ என்ற பெயரில் நாடே பாராட்டிப் போற்றும் வகையில் ஏற்படுத்திய சிறுவர் நலச் சிந்தனையாளர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்களின் நூற் களும், கருத்துமணிகளும் இளைஞருலகத்திற்கு என்றும் வழி காட்டுவனவாகும். இன்று பள்ளி நூலகத்தோடு நல்ல முறையில் தொடர்பு கொண்ட ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் ஆண்டிறுதித் தேர்வில் 600க்கு 275 மதிப்பெண் வாங்கியும் ஒரு பாடத்தில் மட்டும் குறைந்தபட்சம் மதிப்பெண் பெறத் தவறியதால் மேல் வகுப்புக்கு அனுப்பப்பெருத ஒரு நிலையும் உள்ளது. அதே சமயத்தில் ஒவ்வொரு பாடத்திலும் 25 மதிப்பெண்ணே வாங்கி (6 x 25) 150 மதிப்பெண் பெறும் மாணவர்கள் vị