பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் வெறியால் ஏற்படும் கொடுமைகளை விளக்குவது. 1941, 42ஆம் ஆண்டுகளில் பர்மாவிலிருந்து ஓடிவந்த தமிழர் பட்ட துன்பங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். தமிழ் முரசு வார இதழில் வெளிவரப் பெற்றது. 42. அல்லி. பதி 2. சென்னை, தாயக வெளியீடு, 1953. ப 292. ரூ. 3.75. நாவல். கணவனிடத்துப் பணமும் பதவியும் இருந்தும் பண்பும் அன்பும் இல்லாத மனைவி ஒருத்தியின் வாழ்க்கைச் சித்திரம். 43. கரித்துண்டு. பதி 5. சென்னை, தாயக வெளியீடு, 1969, ப. 274. ரூ 4-00. கலையார்வம் மிகுந்த ஓர் ஒவியரது வாழ்க்கையின் ஆடம் பர எளிய ஆகிய இரண்டு எல்லைகளையும் நன்கு எடுத்துக் காட்டும் நாவல். 44. கள்ளேன? காவியமோ? சென்னை, தாயகவெளியீடு, 1970. ப268, ரூ 4-00. இந்நாவலில் தன்மானத்தைவிட அன்பு பெரிதென்று உணரத் தவறிய கணவனும் மனைவியும் பட்ட இன்னல் உருக்க முடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 45. குறட்டை ஒலி. சென்னை, தாயக வெளியீடு, 1956, LI 132. கு 1–75. சிறுகதைத் தொகுப்பு. சமுதாயச் சிக்கல்கள் பலவற் றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகள். 46. செந்தாமரை. பதி 7. சென்னை தாயக வெளியீடு, 1960. ப. 144. ரூ 2-00. சீர்திருத்தத்தை விரும்பிய இளைஞர் சிலரின் காதல் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல். 47. நெஞ்சில் ஒருமுள். பதி 3, சென்னை, தாயக வெளி யீடு, 1963, ப. 548. ரூ. 6.00 86