பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பல்வகை நூலகங்கள் நூலகங்களின் இன்றியமையாமையும் அவற்றின் 'தொண்டும் நன்கு உணரப்பட்டுப் படிப்படியாக அவை தமக்குரிய மதிப்பைப் பெற்றுவரும் இந்நாளில் பல்வேறு வகையான நூலகங்கள் நாடெங்கும் நிறுவப்படுகின்றன. அவையாவன : 1. பள்ளி நூலகங்களும் குழந்தை நூலகங்களும். 2. கல்லூரி நூலகங்கள். - 3. பல்கலைக் கழக நூலகங்கள். 4. அரசினர், நகராண்மைக் கழகத்தினர், தனியார் நடத்தும் பொது நூலகங்கள். 5. நாட்டு நூலகங்கள். 6. சிறப்பு நூலகங்கள். ஒவ்வொரு நூலகமும் தனக்கென தனிக் கொள்கை களைக் கொண்டிருக்கிறது. முதலில் நன்கு திட்டம் வகுத்த பின்னரே, இப் பணியைத் தொடங்குதல் வேண்டும். அதன் முறையான தேவைகளை அடைவதற் கேற்ற வகையில் அது அமைக்கப்பட வேண்டும். பள்ளி நூலகங்களும் குழந்தை நூலகங்களும் 'குழந்தைதான் மனிதனின் தந்தை', நாட்டின் செல்வமும் குழந்தையே. எனவே குழந்தைகளைச் சரி யான முறையில் பயிற்றுவிப்பதில்தான் ஒரு நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. குழந்தையின் இளம்வயதில் அமையப்பெறும் பழக்க வழக்கங்கள்தான், குழந்தையின் எதிர்காலத்தில் வ ழி காட்டுவதற்கு உதவுகின்றன.