பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 விடும் பொருள் சிறிதே. இதன் திறமை இதற்காகச் செல விடப்படும் பொருளின் அளவைப் பொறுத்ததன்று. பயனைப் பொறுத்ததாகும். இதல்ை பலரது அறிவும் கற் பனையும் துாண்டப்படுகின்றன. இதல்ை பெறப்படும் பயன்கள் பெரும் காட்சி ஆரவாரம் அன்று. ஆனல் மக்கள் அரசுப் பண்பைப் பரப்புவதில் தலைமை வகிக்கும் எந்தக் கல்வி நிலையத்தையும் விட உருவில் சிறியதாய் இருந் தாலும் இது பெரும் தொண்டாற்றுகிறது. ஒரு நாட்டின் நிலை, அந்நாட்டு மக்கள் பெற்ற பேறு கள், சமூக நலம் ஆகியவற்றின்மீது சார்ந்திருக்கிறது. அந்தச் சமூக நலம் பற்றியன யாவும், அவர் பெற்ற கல்வி யின் மீதே சார்ந்திருக்கின்றன. பள்ளிகள் மூலமாக அறிவை-கல்வியை எல்லோருக்கும் பங்கிட்டுத் தருவதை = . = I |-- H= விட, சமூக நலத்தின் நிலையை օ ոոոո: வேறு آلِ بیت கிடையாது. இந்தப்பணியில் பள்ளிகளுக்குத் துணையாக நாடெங்கும் அமையும் நூலகங்கள் உள்ளன. இவை சிற்றுார்களில் எல்லாம் நிறுவப்படல் வேண்டும். இத் துடன் இவை சிற்றுார், வட்டம், மாவட்டம் என்ற அடிப்படையில் அமைத்து மேற் பார்க்கப்படவேண்டும். மாநில நூலகங்கள், இவற்றை அமைத்தற்கும் இயக்கு தற்கும் ஒத்துழைப்பதுடன் அலுவலரைப் பயிற்றுவதிலும் பொறுப்பெடுத்துக் கொள்ளல் வேண்டும். பத்துச் சிற்றுார்கட்கு ஒன்றென நூலகங்கள் அமைக்கப்பட்டு அதனுடன் எல்லா ஊர்களுக்கும் செல்வதான சுற்றும் நூலகமும் அமைக்கப்படல் வேண்டும். சுற்றும் நூலகம் (Mobile Library), ஆT ல்கள் நிறைந்த அலமாரிகளுள்ள நெய்யாவி ஊர்தி (van) ஆகும். இவ் வூர்தி இல்லாவிடில் சுற்றிலும் அடைப்புள்ள மாட்டு வண்டியிருத்தல் நலம். அந்த ஊர்கட்கு வேண்டிய நூல் 2