பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அல்லது சொத்து வரியோடு சேர்த்து நூலக வரியும் வாங்குவதற்கு இச்சட்டம் இடந்தரவேண்டும். நமது: அரசியலார் இவ்வாறு நூலகவரி விதித்திருப்பது யாவரும் அறிந்ததே. மாநில அரசினர் துணையோ மேற்பார் வையோ இன்றி நாடெங்கும் நடு அரசினரே பொது நூலகங்களை நிறுவதல் என்ற கொள்கை நன்கு வெற்றி தரக்கூடியதன்று. . o இந்த நூலகங்களை வெற்றியோடு நடத்துதற்கு, பயிற்சி பெற்ற நூலகத்தலைவர் பலர் வேண்டும். நூல்கம் உயிர்நிறை உடலெனின், நூலகத் தலைவர் அதன் மூளையாவார்; விழியெனின் அதன் இமையாவார்; கனி மரமெனின் அதன் ஆணிவேராவார். நூலகப்பணியில் ஈடுபடும் அனைவரையும் பயிற்றுவிப்பதற்குக் குறுகிய காலப்பயிற்சி அளிக்கும் நிலையம் ஒவ்வொரு மாவட்டத் தின் தலைநகரிலும் அமைதல்வேண்டும். spillo sh's jodso (National Library) ஒரு நாட்டிற்கு, நாட்டு நூலகம் என்பது பெரியது; அறிவைக் கொளுத்துவதில் தலையாய மின்சார நிலையம்; வரலாற்றுப் பாதையின் ஏற்ற தாழ்வுகளைக் காட்டும் தெள்ளிய ஆடி. நாட்டு அரசு இதன் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் முழுப்பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறது; ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டு நூலகத்தின் முக்கியப் பணிகளாவன: 1. நாடு முழுமைக்கும் அதன் எல்லாத் துறை அறிவு வேட்கைகளிலும், துணையாகவும் வழி காட்டியாகவும் அமைதல். 2. நாட்டில் வெளியாகும் எல்லா நூல்களையும் வெளி நாடுகளில் வெளியாகும் குறிப்பிட்ட நூல் களையும் சேர்த்துவைத்துப் பாதுகாத்தல்.