பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 இரண்டாவது கொள்கை எவ்வகை நூல்களை வாங்க லாம் என்பதைக் கூறுவது; படிப்போரின் விருப்பத்தை அறிந்து நூல்களை வாங்கவேண்டும். நூலகம் அமைந் திருக்கும் இடத்து மக்களின் விருப்பத்தினையும், அவர்தம் தொழில்களையும் அறிந்து அதற்கேற்ற, வகையில் நூல் களை வாங்கிவைப்பதே நூலகத்தின் தலையாய கடமை யாகும். பள்ளி நூலகமானுல் அது பாடத்திட்டத்திற்கு உரியனமட்டுமன்றி எல்லா வகையான அறிவியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, செலவு, கைத்தொழில் முதலியன பற்றிய நூல்களையும் வாங்கவேண்டும். சிறுவ ரின் ஆர்வத்திற்குத்தான் அளவே கிடையாதே ! பள்ளி நூலகத்தைப் போலவே பொது நூலகங்களிலும் பொழுது போக்குக்கானவையும் நல்வழிக்கானவையுமான நூல்கள் இருக்கவேண்டும். எல்லார்க்கும் நூல்கள்’ என்ற விதிக் கிணங்க பல்பொருள்கள் பற்றியும், பல்வகை நடைகளில் ாழுதப்பட்ட நூல்கள் இருத்தல் வேண்டும். அவனவன் தன் சுவைக்கேற்ப, துறைக்கேற்ப, நூல்களைப் பெற வழி வேண்டும். கற்றறிந்த ஒரு பெரும் புலவன் விழையும் பெரு நூலும், சாதாரண மக்கள் விரும்பும் விவரங்களைத் தரும் எளிய நடையில் உள்ள நூல்களும் அங்கே கிடைக்கவேண்டும். சிறுவர்க்கென தடித்த பெரிய எழுத்துக்களில் அழகிய வண்ணப் படங்களுடன் அச்சி டப்படும் நூல்களும் நூலகத்தில் இடம்ப்ெறவேண்டும். மூன்ருவது விதியின்படி நூல்கள் இருக்கவேண்டிய இடம் நூலகமல்ல; படிப்போரின் கைகளே. உயிரற்ற நூல்கள் படிப்போர் கைகளில் தவழ்வது எங்ங்னம்? படிப் போரிடம் அதைச் சேர்ப்பதோ, அவற்றினிடம் படிப் போரைச் சேர்ப்பதோ நூலகத்தார் கடமை. நூல்கட்கு வாயிருந்தால் இப்பணியாற்ருத நூலகத்தாசைப்பழிக்கும்.