பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எனவே அடிக்கடி கவனிக்கப்பட்ாது போன நூல்களின் சிறப்பை வருவோர்க்கு அறிவிப்பதுடன், புதித்ாக வந்த, நூல்களைப் பற்றியும் உடனுக்குடன் தெரிவித்தல் வேண்டும். துண்டு அறிக்கைகள், சுற்றறிக்கைகள், நாளேடுகள் முதலியன மூலமாக வந்துள்ள புதிய வற்றைத் தெரியப்படுத்தலாம். மேலும் கூட்டங்கள் கூட்டி அறிவிப்பதுடன், பள்ளிகள், தொழிற்சாலைகள், கழகங்கள் முதலியவற்றின் மூலம் அதனைச் சார்ந்தோ ருக்கும் தெரிவிக்கலாம். இயன்ற இடங்களில் படிப்போர் இல்லங்கட்குச் சென்றும் நேரடியாக அறிவிக்கலாம். இந்தியாவில் கல்வியறிவு மிகக்குறைவு. அத்துடன் கற்ருேரிடையே புதுப்புது நூல்களைப் படிக்கவேண்டும் என்ற பழக்கமுமில்லை. மேலும் இந்தியாவில் வெளி யாகும் நூல்கள் மேலை நாடுகளில் வெளியாவனபோல் அத்துணிைக் கவர்ச்சியாய் இல்லை. பல்தொழில் பற்றிய று ஸ்களும் நம்மிடம் இல்லை. பல்துறைப்பட்ட மக்களைக் கவர்கின்ற முறையில் எழுதப்பட்ட நூல்களும் இல்லை. எனவே நம் மக்களை விளம்பரத்தின்மூலம் ஈர்க்க வேண்டும். ஏதோ கூட்டத்தைக் கூட்டி நூல்களை நிரப்பி ல்ை போதும் என்ற உளப்பாங்கும் கூடாது. தாம் செய்யவேண்டிய பணிகளை ஒழுங்காகச் செய்யாமல் மக்க ளுக்கு நூல் படிப்பதில் அக்கறை இல்ல்ை எனல் கூடாது. இருக்கிற நூல்களுக்குப் படிப்போரை ஈர்ப்பதே நூலகத் தலைவரது தலையாய பணியாகும். இதற்குப் பல காலம் பிடிக்கலாம். பொறுமை, அன்பு, விடாமுயற்சி, நம்பிக்கை ஆகிய இவற்றுடன் நல்ல விளம்பரமும் செய்தால் இதனை எளிதில் நிறைவேற்ற முடியும். • நான்காவது விதியோ, நூலகத்திற்கு ஒரு முறை வந்தவரைத் தொடர்ந்து அங்கே வரப் பழக்க வேண்டு மென்கிறது. அதெப்படி முடியும் ? வருவோர் ஒவ்வொரு