பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 படுத்துதல் நன்று. உலோகப்பட்டைகள், சுண்ணும்பு, இரும்பு முதலிய பொருள்கள் இவ்வகையைச் சாரும். ஒரு மிகப் பெரிய அறையில் தித் தடுப்புச் சுவர்களா லான பல சிறு சிறு அறைகள் இருத்தல் நலம். அவற் றுள் மிகப் பாதுகாப்பான ஓர் அறை இன்றியமையா எழுத்துச் சான்றுகளையும் ஒப்பற்ற அறிவுக் கருவூலங் காேயும் சேர்த்து வைப்பத்ற்கு இருத்தல் வேண்டும். நடந்தால் ஒலி எழாதவாறு தளம் அமைத்தல் சிறப் புடைத்து. குறிப்பாக ஆழ்ந்து படிப்போரும் ஆராய்வோ ரும் எப்போதும் வருகின்ற உடனுதவும் நூல் பகுதிக்கு இன்றியமையாதது. இதற்கு “Gräsio IrãIGS35m” (Expanco) வைவிடச் சிறந்ததில்லை. ஒடு போன்று ஒரு சதுர அடி அளவுத் துண்டாகக் கிடைக்கும் இது அழுத்தப்பட்ட கார்க்காகும். இதை எளிதாக சுண்ணும்புத் தரையில் பொருத்தலாம், இது ஒலியற்றது; வெப்பமானது: நீடித்து உழைப்பது; தூசி சேராதது. இதனை அவ்வப் பொழுது தூய்மை செய்யலாம். இதில் எப்பகுதியேனும் சேதமடைந்ததாகத் தோன்றில்ை அந்தப் பகுதியை மட்டும் நீக்கிப் புதிதாய்ப் போடலாம். இதற்குப் பதில் "லிளுேலியம் (Linolium) என்பதையும் உபயோகிக்கலாம். ஆளுல் இதில் ஒரு பகுதி சேதமடைந்தாலும் முழுவதை யும் மாற்றவேண்டும். ரப்பர் தரையையும் உண்டாக்க லாம். ரப்பர் சதுர அளவில் கிடைக்கும்; ஒலி உண்டாக் காது; எளிதில் கழுவலாம்; பல வண்ணங்களில் கிடைக் கும் நீடித்து உழைக்கும். பொது நூலகங்களின், செய்தித் தாள் பகுதி, மற்றப் பொது நூல்கள் படிக்கும் பகுதி இவைகளில் நீடித்து உழைப்பவற்றைத்தான் வைத்துக் கொள்ளலாம். அதிகமாகப் பயன்படுத்தப்படும் இப்பகுதி களில் மரப் பலகைகளையே பயன்படுத்துகின்றனர்,