பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை நாடு நலம் பெற, நல்லவர் தொகை நாட் டில் பெருகவேண்டும். அந் நல்லவர் தொகை கல்வியறிவிஞலேயே பெரு குவதாகும். கற்பன கற்று, அறிவறிந்த நல்லவர் நாட்டை நாடாக்கி, நாளும் ஓங்கி உயர வழி காணுவர். நல்லவரை வளர்க்கக் கல்வியும், கல்வியை வளர்க்க நூல்களும் துணைபுரிகின்றன. இன்று நாட்டில் அச்சக வாயிலாக அழகிய நூல்கள் வெளிவருகின்றன. வருகின்ற நூல்களை அனை வரும் பெற்றுப் பயனடையச் செய்வது இன் றைய மக்கட் சமுதாயத்துக்குச் செய்யவேண் டிய தலையாய பணி. அப்பணிவழியே நாட்டில் பல நூலகங்கள் உருப்பெற்று வருகின்றன. அந்த நூலகங்களின் அமைப்பியலை விளக்கு வதே இந்நூல். எனது அன்பிற்குரிய மாணவர் திரு. அ. £650%90p;#35 ourif M A. B.T., Dip, Lib. Sc. அவர்கள் ஆங்கிலமும் தமிழும் ஒருங்கு கற்ற உணர்வுடையாளர். நூலகத் துறையிலும் பயின்று, தேர்வுற்று, அத் துறையிலேயே சிறக்கப் பணியாற்றுபவர். நூலக வாழ்வே நாட்டின் வாழ்வு' என்பதை நன்கு உணர்ந்த வர். அவ்வுணர்வு நிலையிலே இந் நூலகம்பற்றி முன்பே சில நூல்களை வெளியிட்டுள்ளார். இன்று இந்நூல் தமிழ் மக்களிடை தவழத் தொடங்குகிறது.