பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கிளை நூலகங்களும் வழங்கு நிலைகளும் (Branch Libraries and Delivery Stations) பெருநகர்கள், நகர்கள், சிற்றுார்கள் அல்லது குடி யிருப்புக்கள் முதலிய இடங்களில் நூலகங்கள் திறக்கும் பொழுது அவை ஒவ்வொன்றுக்கும் உரிய அடிப்படை மாதிரியைத் தெரிந்து கொள்ளவேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் ஆன இம் மூன்று பிரிவுகளும் இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் இருக்கின்றன. மூன்ருவது வகையைச் சேர்ந்த இடங்களிலேயே இந்தி யாவின் பெரும் பகுதி மக்கள் வாழ்கின்றனர். நூலகத் தின் தொண்டைப் பெருநகர்களிலும், நகர்களிலும் உள் ளோர் மட்டுமல்லாது நாட்டின் மூலை முடுக்குகளில் கிடந்து உழல்வோரும் பெறும்வண்ணம் பணி புரிதல் வேண்டும். பல பகுதிகட்கு நடுவாக நகர்களில் அமைந்த நல்லதெரரு நூலகம்-எண்ணற்ற அறிவுக் கனிகளை வைத்திருக்கும் பொற் பேழை-சுற்றுப்புறச் சிற்றுாரி னர்க்கும் உதவாது நகரினர்க்குமட்டும் உதவி என்ன பயன் ? நகரிலே வாழ்வோர் அறிவுச் சாற்றை அள்ளிப் பருகப் பல வழிகள் உள. அன்ருட நடப்புக்களை அறி வதற்கும் அறிவுச் செல்வங்களைச் சுவைப்பதற்கும், இருண்ட காடுகளிலும் சாலையற்ற சிற்றுார்களிலும் நசிந் தழிவோர்க்கு என்ன வழிகள் உள ? படுகுழியில் கிடப் போர்க்குக் கை கொடுக்க வழி என்ன ? உலக நடப்பைப் பல வழிகளில் அறியும் நகரினரைப் பார்த்து ஏங்கும் குக்கிராமத்தார், அனைத்தும் அறிய என்ன செய்யலாம் ? நகரினர் வந்து படித்தற்கும் எடுத்துச் செல்லற்கும் வழிகள் தரும் நூலகத்தார், மூலை முடுக்குகளுக்கு நூல் களை எடுத்துச் செல்லவேண்டும். அங்கங்கே உள்ள