பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 கின்றதோ அதைத்தான் மக்கள் படிக்க வேண்டும். நூல். களைத் திரும்பப் பெறுதலிலும் காலம் நீடிக்கிறது. ஆனல் மூலை முடுக்குகளில் வாழ்வோர், நகரத்தார் போலவே குறைந்த செலவில் நூற்களைப் பெற வச்தி, யளிக்கிறது. கிளை நூலகங்கள் அமைக்க முடியாத குறு. கிய பகுதிகளில் இவ்'வழங்கு நிலை”களை அமைக்கலாம். ஆல்ை மக்கள் அப்போதைக் கப்போது சென்று வரக் கூடிய இடங்களில் இவைகள் இருக்க வேண்டும். ஒரு தொழிற்சாலையிலோ, ஒரு மன்றத்திலோ, ஒரு கல்வி நிலையத்திலோ அன்றி அஞ்சல் நிலையத்திலோ, நம்பிக்கை யாகத் தலைமை நூல் நிலையத்தார் நூற்களைக் கொடுத்து வைத்து அவற்றை அதன் உறுப்பினர்கள் எடுத்துச் சென்று படிப்பதற்கு வாய்ப்பளிக்கலாம். ஆனல் நூல் பெற விரும்புபவரிடமிருந்து."பொறுப்புத் தொகையினே"ப். (deposit money) பெற்ற பின்னரே நூற்கள் வழங்குதல் வேண்டும். திங்கள் தோறுமோ அல்லது ஒரு குறிப் பிட்ட நாள்தோறுமோ தலைமை நூலகத்திலிருந்து புத்தம் புதிய நூல்கள் பெட்டிகளில் அமைக்கப் பெற்று இங்கே வரும். புகைவண்டியோ அன்றி நெய்யாவி ஊர்தியோ அவ்வூருக்கு வருமாயின் சில நூற்கள் நாளும்கூட மாற்றிக் கொள்ளலாம். சுற்றும் நூலக வண்டியின் மூல மாகவும் ஒழுங்காக நூல்களைப் பெறலாம். வழங்கு நிலை" கள் நாளும் மாலையில் ஒரு மணி அளவோ அல்லது இரு மணி அளவோ திறக்கப்படும். அதைப் பாதுகாப்பதற்கு பகுதி நேர ஊழியரே பெரும்பான்மையும் இருப்பர். அவருக்குப் போதிய ஊதியம் தருதல் வேண்டும். கிளை நூலகத்தின் மற்ருெரு துணை, சுற்றும் நூலகமாகும். “வழங்கு நிலைகளைக் கூட வைத்துக்கொள்ள முடியாத சிறு மாவட்டத்தார் சுற்றும் நூலகங்கள் மூலமாக நூற். பெட்டிகளைக் குறித்த நாட்களில் பள்ளிகள், பொழுது