பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 எங்கேனும் நூலகத்திற்கு வேண்டிய அளவில் கட்ட டம் கிடைக்கவில்லையானல் அங்கு சென்று நூல் வழங்கு தலே சுற்றும் நூலகத்தின் முதற்கடமை. குடியாட்சி சீரும் சிறப்பும் பெற்று விளங்கும் இக்காலத்தில் அரசியல், பொருளியல் போன்ற வற்ருல் பல மாறுதல்கள் நிகழ் கின்றன. மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப, புதுப்புதுப் பகுதிகளில் உடனுக்குடன் நூலகங்கள் ஏற்படுத்தும் வாய்ப்புக்கள்-குறிப்பாக ஏற்ற கட்டடம் கட்டுதல்கிடையா. அங்குள்ள ஏதேனும் ஒரு பழைய வீட்டை நூலகமாக்கி விடலாமாவென்ருல் அதற்கும் ஏற்ற வசதி கள் கிடைக்காதிருக்கல்ாம். சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற பெரு நகர்களிலே, தலைமை நூலகத்தின் மேற் பார்வையில் இப்படிச் சுற்றும் நூலகங்களை இயக்கல் பொருட் செலவையும் குறைக்கிறது. சுற்றும் நூலகங்கள். தம்முடன் நூல்களை எடுத்துச் சென்று, நிற்கும் ஒவ் வோரிடத்திலும் மக்கள் வேண்டிய நூல்களை விரைந்து தருதற்கு வசதி உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் இது அரை மணி நேரம் நிற்கலாம். முன் கூட்டியே கால அட்ட வணை போட்டு அதன்படியே சென்று நூல்களை வழங்கி வரலாம். கொண்டு போகும் நூற்களில் சில உடனுதவும் நூற்களாக இருத்தல் நலம். மக்கள் வண்டியினுள் வந்தாகிலும் அதைச்சுற்றி நின்ருகிலும் நூற்களை எடுத் துப் படிப்பதற்கு வசதி இருத்தல் வேண்டும். சுற்றும் நூல கத் தலைவர் நூல் வழங்குதல், திரும்பப் பெறுதல், ஐயங் களை அகற்றல் முதலியவற்றைச் செய்வதோடு, தான் பழகும் மக்களிடமிருந்து நூலக வளர்ச்சிக்கான வழிவகை களையும் பெறுகிருர். அவற்றைத் தலைமை நூலகத்தார்க் குத் தெரிவிக்கிருர். சுற்றும் நூலகம் என்பது ஒன்றும் புரட்சியின் விளைவோ அல்லது புதுமையானதோ என்று கூறிவிடமுடியாது. அன்ருடம், பால் வழங்குதற்கும் பிற