பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 போடுகின்றன. முன்பு நூலகங்கள் குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள்ளேயே இருந்தன; சிலரே அதைப் பெரும் பேருய்ப் பயன்படுத்த முடிந்தது. பேராவல் கொண்ட பணக்காரன் போல் அன்றைய நாட்களில் நூலகங்கள் நூல்களைத் தேர்ந்தெடுக்கவும் வைத்துப் பாதுகாக்கவுமே செய்தன; அதோடு முடிந்தது. புதுமையும் பொதுமை யும் பூத்திடும் இன்ருே, அந்த இரு பணிகளோடு மூன்ருவ தான ஒரு பணியையும் செய்கின்றன. அதுதான் ஏற்ற மனிதருக்கு, ஏற்ற காலத்தில், ஏற்ற நூல்களைத் தந்து அவற்றைப் பரப்புதல். ஒரு நூல் எவ்வளவு அறி வையும் பெருமையையும் தன்னகத்தே பெற்றிருந் தாலும் சரி, ஏற்ற மனிதருக்கு அது உதவாதபோது, அதை பயனற்றதென்றே கூறலாம். சுவை பல பொருந் தியதாயினும், பசிக்குதவாத உணவால் என்ன பயன் ? புதுமை வேட்டிடும் இன்றைய நாடுகள் அச்சடிக்கப் பட்டவற்றின் துணையுடன் அறிவை எல்லோர்க்கும் உரிய தாக்கத் தம்மால் இயன்ற அளவு பாடுபடுகின்றன. கிடைக்கின்ற ஒவ்வொரு நூலும் நாட்டு நலனுக்காக மக் களிடை பரப்பப்பட வேண்டும். நூலகங்கள் மக்களுக்கும் நூல்களுக்குமிடையே தொடர்பு ஏற்படுத்துவதில் துணை நிற்க வேண்டும். புதிய நூல்களைப் பற்றி அமைப்பான விளம்பரங்கள், அவற்றின் பொருளடக்கத்தையும் அது தரும் பயனையும் விளக்கி வெளியிடல், நூலகங்கள் பார் வைக்குக் கவர்ச்சியாகவும் ஏளிதில் செல்வாக்குப் பெறுவ தாயும் அமைத்தல் மூலமாக மக்கள் தொடர்பைப் பெற லாம். இந்தப் பணிகளின் நிறைவுதான் நூலகங்களை உயிருடையனவாக, உணர்வுடையனவாக ஆக்கு கின்றன. இந்தப் பணிகள் நிகழாவிடின் நூலகம் யாருக் கும் பயனற்று, நிலை கெட்டு விடும். காட்டில் றிந்த நில வால் பயன் கண்டார் யார்? ஒவ்வொரு நூலகமும் எச்