பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நூல்களைப் பர் துகாத்தல் - நூல்களையும் பிற சுவடிகளையும், தட்பவெட்ப நிலை மாற்றம், புழு பூச்சி, தி இவற்ருேடு குறிப்பாக மனிதன் முதலியவற்ருல் ஏற்படும் தீமைகளிலிருத்து பாதுகாத்தல் கடினமான தொன்ருகும். தீச் சூழல், மனிதல்ை சிதைக் கப்படல் இரண்டும் எந்நாட்டுக்கும் பொதுவானவை. ஆனல் வெப்பநாடுகளில்; மிகுந்த வெப்பம், ஈரம், தூசி புழு பூச்சிகள், நூலைத் தீய்க்கும் சூரிய ஒளி முதலியன குறிப்பாகத் தொல்லை தருவன. -- -- தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப அடிக்கடி மாறுபடும் வெப்ப நிலை, ஈரம் முதலியன படிப்படியாகத் தொல்லை தருவன. மேலை நாடுகளுக்கு இது பொருந்தாது. இ. வகைத் தொல்லையைக் கூடிய மட்டும் நீக்க, நூல்களை நல்ல காற்றும் சூரிய ஒளியும் உள்ள இடங்களில் வைத் தல் நலம். முடிந்தால் நூல் அறைகளின் தட்ப வெட்ப நிலை செயற்கை முறைகளால் சமமாக வைக்கப்படலாம். கட்டட ஈரத்தால் தீமை வராதிருக்க, நூலகக் கட்ட்ட அடிப்படையை ஆழமாகப் போட வேண்டும் , தரையைக் கூடிய மட்டும் உயர்த்த வேண்டும். - நூலை அழிப்பவற்றில்தான் எத்துணை வகை! எலி கள், வெள்ளை எறும்புகள், கரையான்கள், அந்துகள் என எத்துணையோ சிறிய உயிர்கள் நூலை அழிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. பூசாரம், காளான் போன்ற சிறு தாவரங்கள் பழம் பொருள்கள் மீது எளிதில் வளர்கின்றன.இதைத்தடுக்கஅவற்றை உலர்ந்த ஒர் அறையில் வைக்கவேண்டும். தோல் கட்டடங் களாலான நூல்களை அடிக்கடி பிரிச் அல்லது சீடார் G