பக்கம்:நூலக ஆட்சி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களையும் பிற இதழ்களையும் சரிபார்த்தல், நூல்களிலுள்ள சிறு சிதைவுகளைப் பார்த்தல், வழங்குநூற் பதிவேட்டைச் சரிபார்த்தல் என்பன அவர்களுடைய நாள் வேலைகள்.

நூலகத்தினுள்ளே செய்யும் பணியும் ஒன்றுண்டு. அஃதாவது மணிக்கணக்காக நூலகத்தினுள்ளே நின்றும் நடந்தும் நூல்களை உரிய இடத்திலே வைத்தலும் சரிவர அமைத்தலும் சேர்த்தலும் ஆம் என்க. பெரிய நூலகங்களிலே பரந்த இடம், நல்ல இருக்கை, ஒளியமைப்பு என்பன இருக்கும். நூலகம் சிறியதோ பெரியதோ அங்கு வேலை செய்யும் பொழுது சூழ்நிலை அழகாகவும் மகிழ்ச்சியூட்டத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்.

வேலை நேரம் நூலகத்திற்கேற்ப மாறியிருக்கும். பல பொது நூலகங்களும், கல்லூரி நூலகங்களும் நாள் தோறும் பன்னிரண்டு மணி நேரம் திறக்கப்பட்டிருக்கும். நூலக உதவியாளர்கள் குழுவாகப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட மணிக்கு ஒரு குழுவாக வேலை செய்வர்.

நூலகத் தலைவர் சிறந்த கல்வி அறிவுடையவராகவும் நூலகப் பயிற்சி பெற்று நூலகத் தேர்விலே வெற்றி பெற்று பல்கலைக்கழக நற்சான்றிதழ் பெற்றவராகவும் இருத்தல் சாலச் சிறந்ததாகும். நூலக உதவியாளர்களும் பயிற்சி பெற்றவராயிருத்தல் நூலகத் தலைவருக்கு மிகவும் உதவியாயிருக்கும்.

கூர்சரம், மகாராட்டிரம், கன்னடப் பகுதிகளிலுள்ள நூலகக் கழகங்கள் ஆறு வார கால நூலகப் பயிற்சி அளிக்கின்றன. பம்பாயிலும், தில்லியிலும் உள்ள இரு நூலகக் கழகங்கள் அவ்விரு நகரங்களிலே ஆறு முதல் ஒன்பது மாத கால நூலகப் பயிற்சி அளித்து நற்சான்றிதழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/13&oldid=1111538" இலிருந்து மீள்விக்கப்பட்டது