பக்கம்:நூலக ஆட்சி.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழங்குகின்றன. ஆறு வார காலப் பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த அளவு பத்தாவது வகுப்பினையாவது முடித்திருக்க வேண்டும். ஆறு மாத காலப் பயிற்சிக்கு மேலும் இரண்டாண்டுகள் கலையிலோ அறிவியலிலோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

பட்டங்களும் (Degrees) பயிற்சிப் பட்டங்களும், (Diploma course) சென்னை, ஆந்திரா, பம்பாய், தில்லி, கல்கத்தா, பஞ்சாப், காசி, அலிகார் என்ற பல்கலைக் கழகங்கள் அளிக்கின்றன. பயிற்சிப் பட்டங்கள் பம்பாய் பல்கலைக் கழகத்தில் மட்டும் இரண்டாண்டுகள் கழித்துத் தரப்படுகின்றன; ஏனையவற்றில் ஓராண்டில் தரப்படுகின்றன. பயிற்சிப் பட்டம் பெற விரும்புவோர் குறைந்தது இளங்கலைப் பட்டம் (பி. ஏ.) பெற்றவராயிருத்தல் வேண்டும். கல்லூரிக் கட்டணம் மாதத்துக்கு ஐந்திலிருந்து பதினைந்து வெண்பொற் காசுகள் வரையும், தேர்வுக் கட்டணம் இருபதிலிருந்து முப்பத்தைந்து வெண்பொற் காசுகள் வரையும், உணவு இல்லக் கட்டணம் அறுபது முதல் தொண்ணூறு வரையும் வேறுபடுகின்றன.

சென்னைப் பல்கலைக் கழகம் நூலகத்தார்க்கு மூன்று மாத காலப் பயிற்சியும் அளிக்கின்றது. இதில் சேர விரும்புவோர் குறைந்தது இடைக்கலைத் தேர்விலாவது வெற்றி பெற்றிருக்கவேண்டும். மேலும் பள்ளி இறுதித் தேர்வில் (S.S.L.C.) வெற்றி பெற்று நூலகத்தில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்த எவரும் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம். இது போன்றே ஆந்திரப் பல்கலைக் கழகமும் மூன்று மாதகாலப் பயிற்சி அளிக்கின்றது. இப்பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த அளவு பத்தாவது வகுப்பினையாவது முடித்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/14&oldid=1111539" இலிருந்து மீள்விக்கப்பட்டது