பக்கம்:நூலக ஆட்சி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
க. நூற்பட்டியலின் தொகை (Cumulative Book Index) :)

இது அமெரிக்க நாட்டு நியூயார்க்கில் வெளியிடப்படும் ஓர் உலக நூற்பட்டியலாகும் (World list of books). ஒவ்வொரு மாதமும் நூல்வடிவில் இது வெளியாகின்றது. ஆண்டின் இறுதியில் உலகிலுள்ள எல்லா நூலகங்களுக்கும் (வேண்டினால்) பன்னிரண்டு பட்டியல்களும் பணமின்றி அனுப்பப்படும்.

கிடைக்குமிடம் :

எச். டபிள்யூ வில்சன்கோ , 950, யுனிவர்சிடி அவென்யூ, நியூயார்க்-52.

உ.. ஆங்கில நூற்பட்டியல் தொகை :

ஆண்டுதோறும் வெளிவரும் நூற்பட்டியல் தொகையாகும்.

௩. தற்கால இலக்கியங்களின் நூற்பட்டியல் தொகை (Reference Catalogue of Current Literature) :

இங்கிலாந்தில் ஈராண்டுகளுக்கொருமுறை இது வெளியிடப்படுகின்றது. நூலாசிரியர்களுடைய அகர வரிசைப்படியும் பொருள் வாரியாகவும் நூல் விவரங்கள் தரப்படுகின்றன.

கிடைக்குமிடம் :

ஜே. வைடாகர் அண்டு சன்சு, 12, வார்விக் லேன், பாடெர் நாச்டெர் ரோ, இலண்டன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/23&oldid=1111756" இலிருந்து மீள்விக்கப்பட்டது